பக்கம்:இல்லற நெறி.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522

இல்லற நெறி


இருத்தல், பிரிதல், ஊடல், இரங்கல் என்று ஒத்த அன்புடை யாரது ஒழுகலாறு பிரித்துப்பேசப் பெறும். குறிஞ்சி முதலிய ஐந்தும் இடத்தையும் ஒழுக்கத்தையும் குறிக்கும் பொதுச் சொற் ௗாகும். இந்த ஐந்துவகை ஒழுகலாறுகளும்,

போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுக்குறிஞ்சி ஆக்சஞ்சேர் ஊடல் அணிமருதம்,-நோக்குங்கால் இல்லிருத்தல் முல்லை, இரங்கல் நறுநெய்தல் சொல்லிருத்த நூலின் தொகை.

என்ற பழம்பாட்டில் கூறப்பெற்றிருத்தலைக் கண்டு மகிழ்க, பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்; அஃதாவது ஒவ் வாக் காமம். குட்டநோய் 'பெருநோய்' எனப்பட்டது போலவும், இறப்பு 'பெரும் பிரிவு' எனப்பட்டது போலவும் பொருந்தாத காமம்-கொடிய காமம்-பெருந்திணை எனப் பட்டது. ஒருவன் ஒருத்தியாகிய இருவருள் ஒருவருக்கொரு வர் அன்பின்றிக் கூடிவாழும் நிலையே பெருந்திணையாகும். உலகில் பெரும்பாலும் இவ்வகை உறவே இருத்தலின் இது பெரு ந்திணை' என்று வழங்கப்பெற்றது. எனவே, பண்டை யோர் அகத்தினையொழுக்கத்தை ஒருதலைக் காமம், ஒத்த காமம். வ்வாக் காமம் என்று மூன்று தொகுப்பாகக் கூறி யுள்ளனர் என்பதை அறிவாயாக இதனை தொல்காப்பியர்,

கைக்கிளே முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப . என்ற நூற்பாவால் பெற வைக்கின்ருர். கைக்கிளையை முத லிலும், பெருந்திணையை இறுதியிலும் கூறி எழுதினே' என்று தொகை கூறியதால் இடைநின்றது ஐந்தினை' எனப் பட்டது என்பதை உணர்வாயாக.

தமிழரின் உலக வழக்கு : பழந்தமிழ் மக்கள் ஆண் பெண்

கூட்டு வாழ்க்கையின் உண்மைப் பொருளை நன்கு உணர்ந்தி ருந்தனர். அவர்களில் ஒத்த பருவமுள்ள காளையரும் கன்னி

3. அகத்திணை-நூற். 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/528&oldid=1285332" இலிருந்து மீள்விக்கப்பட்டது