பக்கம்:இல்லற நெறி.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534

இல்லற நெறி


முடியவில்லை. எனவே, இன்று குடும்பம் ஒன்றுபாட்டுடன் திகழவேண்டுமாயின், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே யும், பெற்ருேர்கட்கும் குழந்தைகட்கும் இடையேயும் அக விசைகளும், அகவொற்றுமையும் நிலவ வேண்டியுள்ளன. பண்டிருந்ததைவிட இன்று மக்கள் திருமணத்தினால் அதிக மான நலன்களை எதிர்பார்க்கின்றனர். மருத்துவமனைகளில் இன்று காணப்பெறும் அதிகமான நோயாளிகளின் எண்ணிக்கையைக்கொண்டு இன்று உலகில் நோய் அதிக மாகிவிட்டது என்று சொல்ல முடியாது: மருத்துவமனைகள் அதிகமாகத் தோன்றியிருப்பதால் அந்த வசதிகளை அதிக மான மக்கள் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர் என்று தான் கருதவேண்டும். அங்ங்னமே, அதிகமான மணமுறிவு களும், ஜீவனம்ச வழக்குகளும் அதிகமாக இருப்பதுபோல் தோன்றுவதற்குக் காரணம், மக்கள் பொருந்தாத திரு மணத்திலுள்ள குறைகளைப் போக்குவதற்கு நீதி மன்றங் களைப் பயன்படுத்துகின்றனர் என்பதேயாகும். ஆகவே, உண்மையில் குடும்பம் சிதைந்து போகவில்லை; அது புதிய சூழ்நிலைக்கேற்றவாறு பொருத்தப்பாடு அடைந்து வரு கின்றது என்று கொள்வாயாக.

முரண்பாட்டிற்குக் காரணங்கள் : திருமண உறவில் நேரிடும் காரணங்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக் கலாம், முதலாவது: கணவனே, மனைவியோ, அல்லது இருவருமோ உள்ளக் கிளர்ச்சியில் முதிராத நிலையில் இருக் கலாம்; அல்லது நரம்பு நோய்பற்றிய ஆளுமையுடையவர் களாகவும் இருக்கலாம். இதனுல் இருவரிடையேயும் திருப்தி கரமான முறையில் பொருத்தப்பாடு அமைய முடிவதில்லை, இரண்டாவது: ஒரு குறிப்பிட்ட தம்பதிகளின் உறவு சரியாக அமையாதும் இருக்கலாம். அவர்களுடைய மனப்பான்மை கள், மதிப்பீடுகள், கவர்ச்சிகள் ஆகியவற்றில் குறிப்பிடத் தக்க அளவு வேறுபாடுகளிருக்கலாம்; அல்லது இருவரிடை யேயும் போதுமான அளவு காதலும் அன்பும் இல்லாதிருக் கலாம். அவர்களுடைய பால் வாழ்க்கை திருப்தியில்லா திருக்கலாம்; அல்லது குழந்தை இல்லா நிலையும் முனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/540&oldid=1285339" இலிருந்து மீள்விக்கப்பட்டது