பக்கம்:இல்லற நெறி.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 535

குறைக்கு ஒரு காரணமாக அமையலாம். இவற்றல் அவர் கன் இணைந்திருக்க முடிவதில்லை மூன்ருவது: இவரிடையே யும் எழும் முரண்பாடுகள் சமூகப் பொருளாதார நிலைகள், பெற்ருேர் தலையீடு போன்ற புறவிசைகளால் எழலாம்; இக்கூறியவற்றுள் யாதாவது ஒன்று கணவன்-மனைவி ய்ரிடையே வளரும் நல்லுறவினைக் குலத்துவிடல் கூடும். சுருங்கக் கூறினால் திருமண முரண்பாடுகளின் மூலங்கள் தம்பதிகளின் ஆளுமைகள், பொருந்தாத் திருமணம், அவர் கள் வாழும் சூழ்நிலை ஆகிய மூன்று பகுதியில் அடங்கு கின்றன. பெரும்பாலும் முரண்பாடுகள் எழுவதற்குரிய காரணங்கள் இவ ற்றுள் யாதாவது ஒருதலைப்பினுல் அடக் கவோ, அல்லது அவற்றைத் தனியாகப் பிரித்தறியவோ இயலாது. ஏனெனில், ஒன்றில் பல்வேறு கூறுகள் பங்கு பெறுகின்றன. இக்கூறுகளும் ஒன்றைவிட்டு ஒன்றினைப் பிரித்தறிய முடியாதவாறு பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. மேற்கூறிய மூன்று பகுதிகளாகப் பிரித்துக் காட்டிய காரணங்கள் யாவும் இதற்கு முன்னர் தொல்காப்பியர் காட்டியுள்ள பத்துவகைப் பொருத்தங்களில் ஒன்ருே பல வோ இல்லாமையால்தான் எழுகின்றன என்பது ஆராய்ந்து பார்ப்பவர்கட்குப் புலனுகும். இங்ங்ணம் உணர்ந்து பார்க் கும்பொழுதுதான் வாழ்க்கையின் பல்வேறு கூறுபாடுகளை யும், மனித இயல்பின் பல்வேறு போக்குகளையும் நன்கு எண் னிய தொல்காப்பியரின் பெருமையும் அவர் அருளியுள்ள வாழ்க்கைக் கண்ணுடியாகிய தொல்காப்பியத்தின் அருமைப்பாடும் நமக்கு நன்கு புலகுைம்.

அன்புள்ள. திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/541&oldid=598740" இலிருந்து மீள்விக்கப்பட்டது