பக்கம்:இல்லற நெறி.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 器速畿

மேற்கூறியவற்றிலிருந்து எல்லாவகையிலும் தேவை யான அளவு முதிர்ச்சியடைந்த மனிதர்களைக் காண்டல் அரிது என்பது தெளிவாகின்றதல்லவா? நம்முள் பலர் ஒன்று அல்லது பிறிதொரு கூறில் முதிர்ச்சியடையாதுள்ள னர். சிலசமயம் நாமே நடத்தையிலும் சிந்தனையிலும் குழந்தையைப்போலுள்ளோம்; இன்றைய வாழ்வில் நாம் குழவிப் பருவத்தில் பெற்ற அநுபவங்கள், இறுக்கங்கள், பாதுகாப்பின்மை ஆகியவற்றின் விளைவுகளே இதற்குக் காரணமாகும். எனினும், நாம் நம்மிடமும் நம்முடைய துணைவியரிடமும் சிலசமயம் காணப்பெறும் முதிர்ச்சியடை யாத வினைகள் எதிர் வினைகளின் அறிகுறிகளையும் காரணங் களையும் புரிந்து கொள்ள முயலுவோமாயின், நம்மிடம் பொறுக்கும் பண்பும் ஏற்றுக்கொள்ளும் பண்பும் வளரும். இதுவே முதிர்ச்சி பெற்றதற்கு ஒருவகைச் சான்ருகும்; இங்ங்ணம் பெற்ருேர் நிலைமையைப் புரிந்து கொள்வதாலும் வழிகாட்டுவதாலும், பாதுகாப்பு தருவதாலும் நிலைத்த சமூக ஒழுங்காலும் எதிர்கால மக்களின் முதிர்ச்சி அமை கின்றது என்பதை ஒவ்வொரு தம்பதிகளும் உணர்தல் வேண்டும்.

பண்பாட்டுப் பொருத்தப்பாடு : சாதாரணமாக ஒரு தம்பதிகளிடம் நாம் மேலே கூறிய உள்ளக்கிளர்ச்சி முதிர்ச்சி அமைந்திருக்கலாம். ஆயினும் அவர்கள் இரு வேறுபட்ட பண்பாட்டின் அடிப்படையில் வளர்ந்தவர்களாதலாலும் கல்வி கவர்ச்சிகள் போன்றவற்றில் வேறுபட்டவர்களா தலாலும் அவர்களிடமும் அதிகமான முரண்பாடுகள் எழுகின்றன. இத்தகைய முரண்பாடுகள்யாவும் முன்கடிதத் தின் இறுதியில் குறிப்பிட்ட இரண்டாவது வகை முரண் பாடுகளின் மூலங்களாகும். இதற்கும் பல எடுத்துக்காட்டு கள் உள்ளன. சில சமயம் பெரிய இடங்களில் கல்லூரி பல் கலைக் கழகங்களில் படித்துப் பல பட்டங்கள் பெற்று உயர்ந்த பதவியிலிருக்கும் ஆடவருக்குச் செல்வந்தர் குடும் பத்திலுள்ள பெண் (சாதாரணமாக ஐந்தாவது வகுப்பு வரை படித்தவள்) வாழ்க்கைப்படுவதுண்டு, அங்கணமே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/549&oldid=598756" இலிருந்து மீள்விக்கப்பட்டது