பக்கம்:இல்லற நெறி.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 547

கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் சிறு கருத்துவேறுபாடு களால் தொந்தரவு இல்லாமலிருந்தது. இன்று இவையே மணமுறிவுக்குப் போதுமானவையாகவுள்ளன. எல்லாப் பொருத்தங்களும் சரியாக அமைந்துவிட்டால் எந்தவிதத் தொல்லைகளும் இல்லை. சிலவற்றில் குறையிருப்பின் அவை பொருளாதாரச் சுதந்திரத்தினுல் மணமுறிவில் கொண்டு செலுத்திவிடுகின்றன.

சில குடும்பங்களில் கணவன் குடும்பத்தைக் காக்கும் அளவுக்குப் பொருளாதாரநிலை சரியாக இருப்பதில்லை. பொருளாதாரக் குறைவு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நிலைமைகள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிணக்குகளை உண்டாக்கி அது மணமுறிவிலும் கொண்டு செலுத்திவிடுகின்றது, இல்லாரை எல்லாரும் எள்ளுவர்: என்ற வள்ளுவப்பெருமானின் வாக்கை ஒர்க. அது வேறு காரணத்திற்காகக் கூறப்பெற்றிருப்பினும், சில குடும்பங் களில் மனைவியும் கணவனை மதிக்காது போய்விடும் நிலைமைக் கும் இது பொருந்துகின்றது என்றும் கருதலாம். மேலும், பணத்தின் பெருமையை அவ்வைப் பிராட்டியும்,

கல்லானே யான லுங் கைப்பொருளொன்று உண்டாயின் எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லான இல்லாளும்வேண்டாள்மற்றுசன்றெடுத்ததாய்வேண்டால் செல்லாது அவன் வாயிற் சொல்.:

என்றும்,

மானம் குலங்கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளான்மை-தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்பறந்து போம்.??

24. குறள்-702. 25. நல்வழி-84. 26 நல்வழி-6ே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/553&oldid=598766" இலிருந்து மீள்விக்கப்பட்டது