பக்கம்:இல்லற நெறி.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548

இல்லற நெறி


என்றும் கூறியிருப்பதிலிருந்து திருமண உறவிற்குப் பொரு ளாதாரம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர் இ. பொருளாதாரப் பாதுகாப்பின்மையால் ஏற்படும் கவலைகளும் அச்சங்களும் குடும்பத்தைப் பெரிய அளவில் பாதிக்கும்; இதல்ை கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஓயாத பூசல், சச்சரவு முதலியவற்றைக் காணலாம். இத ளுல் செல்வம் அதிகமிருந்தால் கணவன்-மனைவியரிடையே அதிகமான உறவு இருக்கும் என்றும் கருதல்வேண்டா, கன இ. மனவியரின் ஆளுமைக் கூறுகளைப் பொறுத்தே திருமண உறவு நன்கு ஏற்படும் என்பதை உளங்கொள்க. சமூகப் பொருளாதாரத் தொல்லைகள் இருப்பினும் கணவவே கண் கண்ட தெய்வம்” என்று உறுதியுடன் அனைத்தையும் பொறு மையாகச் சகித்துக்கொண்டு இல்லறம் நடத்தும் பென் மணிகள் இன்றும் இருக்கின்றனர். தகாத வழியில் செல்லும் கணவன்மார்களைத் திருத்தி நல்வாழ்க்கையில் ஈடுபடுத்தும் நாரியர்கள் இன்றும் உள்ளனர். இப்பொருளாதாரத்தைத் தவருக உணர்ந்ததால்தான் வரதட் இணைக் கொடுமைகளும் பிறவும் தோன்றின.

மாமனர், மாமியாரின் தொல்லைகள்: சில குடும்பங்களில் கனவன் மனைவியர் சுயேச்சையாக வாழ்வதற்கு மாமனர், மாமியார் பெருந்தடைகளாக உள்ளனர். இவர்கள் இளந் தம்பதிகளிடம் திருப்தியான நல்லுறவு ஏற்படுவதற்குத் தடைகளாக இருப்பதுடன் அடிக்கடி முரண்பாடுகள் எழுவ தற்கும் காரணமாகவுள்ளனர். இவர்களால் உண்டாகும் சங்கடங்கள் இரண்டு விதமாக எழலாம். கணவனே மனை வியோ எடுத்ததற்கெல்லாம் தம் பெற்ருேர்களைச் சார்வதன லும், அல்லது பெற்றேர்கள் வயது வந்த தம் பிள்ளைகட்கு யாதொரு விதமான பொறுப்புகளையும் தராமல் எல்லாச் செயல்களிலும் தாம் தலையிடுவதிலுைம் இந்தச் சங்கடங்கள் எழுகின்றன.

தக்க வயதுவந்த பின்னரும் பலர் தம் தாயின் முன்ருனே யைப் பற்றிக்கொண்டே இருக்கின்றனர். அவர்களிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/554&oldid=1285346" இலிருந்து மீள்விக்கப்பட்டது