பக்கம்:இல்லற நெறி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இல்லற நெறி


மேல் நாடுகளில்-குறிப்பாக அமெரிக்காவில்-மேற் கூறப்பெற்ற இரண்டு நோய்களாலும் பீடிக்கப்பெற்ற வர்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று சட்டத் தின்மூலம் தடுக்கப் பெறுகின்றது. திருமணம் புரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் அரசினரிடம் உரிமைச்சீட்டு?? வாங்கவேண்டும். இதை அரசினரிடமிருந்து பெறுவதற்குரிய விண்ணப்பத்துடன் தம்மிடம் மேகநோய் இல்லை என்ற மருத்துவரின் சான்றிதழையும்? இணைக்கவேண்டும். மருத் துவரின் சான்றிதழ் விண்ணப்பம்செய்வோருக்கு ஒரு மாதத் திற்குள் செய்யப்பெற்ற குருதிச்சோதனைப்பற்றிய அறிக்கை யையும் குறிப்பிட்டுக்காட்டவேண்டும். முப்பது நாட்களுக்கு மேற்பட்டால், மீண்டும் அவர் ஒரு குருதிச்சோதனைக்கு உட் படவேண்டும். இத்தகைய சட்டங்கள் மானிட இனம் இந் நோய்களால் பீடிக்கப்படுவதிலிருந்து காக்கப்பெறுவதற் குத் துணையாக அமைகின்றன. இன்றும் சில நாடுகளில் கருவுற்ற பெண்களும் குருதிச்சோதனைக்கு உட்படவேண்டும் என்ற சட்டமும் செய்யப்பெற்றுள்ளது. இதனுல் பிறக்கப் போகும்குழவிகள் நோய்களினின்றும் காக்கப்பெறுகின்றன.

மன நோய்கள் மரபுவழியாக இறங்குகின்றனவா என் பது பற்றி இன்னும் உறுதியான முடிவு ஏற்படவில்லை; இத் துறையில் இன்னும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. குழவி கள் பிறக்குங்கால் ஏற்படும் தீங்குகள், உள்ளக் கிளர்ச்சி அதிர்ச்சிகள், சுரப்பிகளில் ஏற்படும் சில கோளாறுகள் போன்றவைகளால் மனநோய்கள் உண்டாகின்றன என்று சொல்லப்பெறுகின்றது. எனினும், சில உள நோய் ள்: 2 வலிப்பு: மந்த்மதி போன்ற ஒரு சில மனக் கோளாறுகள் மரபுவழியாக இறங்கும் போக்கினைக் காட்டுவதாகப் பெரும் பாலான மருத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர். அண்மைக்

90. 2 ffsoudS FLG-License. 91. Firstrogo—Certificate: 92. 2 or(35srü—Psychosis. 93 : su alt L—Epilepsy.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/72&oldid=1285111" இலிருந்து மீள்விக்கப்பட்டது