பக்கம்:இல்லற நெறி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 67

காலத்தில் மூளையின் அலைகளை' அளந்து வலிப்புநோய்களை ஆராயும் முறை கண்டறியப்பெற்றுள்ளது.

திருமணம் புரிந்து கொள்வோர் மரபுவழிபற்றிய கருத் துகளையும் சில முக்கிய நோய்களால் ஏற்படும் விளைவுகளை யும் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் கருதியதால் இவற்றை ஒரளவு சற்று விரைவாகக் கூறினேன். தங்கட்குப் பிறக்கப்போகும் குழவிகளின் நலனை எண்ணியும், நாட்டில் சிறந்த நோயற்ற குடிமக்களை உண்டாக்க வேண்டும் என்ற பொறுப்பைச் சிந்தித்தும் மணமக்கள் இச்செய்திகளைக் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்; தோட்டத் காரன் அல்லது உழவன் நல்ல விரைகளையும் நல்ல விளைநிலத் தையும் தேர்ந்தெடுப்பதுபோல், நாமும் தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா? மானிட இனம் செழித்து ஒங்குவதற்குஅதற்கேற்ற வாய்ப்பினே நல்குவதற்கு-இக் கருத்துகள் ஒரளவு பெருந்துண்ை புரியும் என்று உணர்வாய் என்று எண்ணுகின்றேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

9,759-Brah wave,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/73&oldid=598896" இலிருந்து மீள்விக்கப்பட்டது