பக்கம்:இல்லற நெறி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் - 69

களினல் சிறந்த குழவிகள் பிறக்கின்றன; சில குடும்பங் களில் அத்தகைய சம்பந்தங்கள் குறைபாடான பண்பு களுடன் குழவிகள் தோன்றக் காரணமாகிவிடுகின்றன: எனக்குத் தெரிந்த ஒரு வழக்கறிஞரின் குடும்பத்தில் அம்மை யார் பிறவிச்செவிடு; வழக்கறிஞரிடம் எந்தவிதமான குறை பாடுகளும் இல்லை. அக் குடும்பத்தில் எல்லா ஆண் பிள்ளை களும் செவிடர்களாவே பிறந்தனர்; பெண் குழவிகளிடம் அத்தகைய செவிட்டுத்தன்மை இல்லை. இன்னெரு குடும்பத் தில் ஆண் பிள்ளைகள் யாவரும் தாயின் முகக்குறிகளையும், பெண் பிள்ளைகள் யாவரும் தந்தையின் முகக் குறிகளையும் கொண்டுள்ளனர். நான் அறிந்த மற்ருெரு குடும்பத்தில் நான்கு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளே களும் செவிடர்கள். அவர்களுடைய பெற்ருேர்களிடம் இக் குறைபாடே காணப்பெறவில்லை. இவர்கிளிருவரும் அத்தை மகன், மாமன் மகள் என்ற முறையில் உறவுடையவர்கள்: இவர்கள் மரபுவழியை நோக்கினதில் இருசாரார் வழியிலும் பலரிடம் செவிட்டுத் தன்மை இருந்ததாகத் தெரிகின்றது: ஆகவே, உறவினர்களுக்குள் செய்யப்பெறும் திருமணம் ஒவ் வொன்றையும் தனித் தனியாக ஆராய்ந்தே செய்யப் பெறுதல் வேண்டும். இயன்றவரை இத்தகைய மிக நெருங் கிய சம்பந்தம் செய்துகொள்ளாதிருத்தல் நன்று. ஆனல் இத்தகைய சம்பந்தமே கூடாது என்று சொல்லுவதற்கு மில்லை.

மேற்கூறியவற்றிலிருந்து இனமேம்பாட்டியலின் அடிப் படையில் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் ஏதாவது தரப்படுத்திய விதிகள் நமக்குத் துணைபுரியக் கூடுமா என்று நீ வினவலாம். சிறந்த குழவிகளைப்பெற வேண்டும் என்ற நன்னுேக்கத்தில் ஒருவர் இனமேம்பாட்டிய லின் அடிப்படையில் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்க விரும்பினுல், அவர் உடல்வன்மையிலும், உளப்பாங்கிலும் நன்னிலையிலுள்ள ஒருவரையே தேர்ந்தெடுக்கவேண்டும்.

دسته بمببی. سیجی

95. 35q"L'îu@.ĝiĝuu-Staridardișod;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/75&oldid=598900" இலிருந்து மீள்விக்கப்பட்டது