பக்கம்:இல்லற நெறி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இல்லற நெறி


ஆனல், ஒருசிலருக்கே இம்முறை ஒப்புக்கொள்ளத்தக்கதாக இருக்கும். காதல் உலகில் வாழ்வோருக்கும், பணத்தாசை மிக்கோருக்கும் இம்முறை ஏற்காது. இந்த விதிகளின் அடிப் படையில் மதனன் மலரம்புகளை எய்யான்; அவன் தன் விருப்பப்படியே, சுயேச்சையாகவே தன் செயலைச் செய்து வருவான்; எனினும், நாம் ஒரளவு அறிவுநிலையில் செயற்பட லாம். உடற்குறைபாடும் உளக்குறைபாடும் உள்ள குடும்பங் களில் சம்பந்தம் செய்து கொள்வதைத் தவிர்ப்பதே அறிவு டைமையாகும். தாய்வழியாகவும் தந்தைவழியாகவும் உள்ள 'ஜீன்கள்”புதிதாகப் பிறக்கப்போகும்.குழந்தையிடம் ஒன்ருகக் கலக்கும்போது அவை இரண்டு வகையும் முற்றிலும் வேறு பட்ட இருப்புச்சரக்கிலிருந்து வந்தவையாகவும் முற்றிலும் வேறுபட்டுச் செல்லும் பண்புகளையுடையனவாகவும் இருப் பின், சிறந்த பலனை எதிர்ப்பார்க்கலாம். எனவே, நல்ல பண்புகளைக் கொண்டகுடும்பத்தில் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் முதலிடம் தருவதே விரும்பப்படுவது. இனமேம்பாட்டியில் இயக்கத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று, மக்களிடம் இனமேம்பாட்டியல் மனப்பான்மையை உண்டாக்குவதாகும்:

நல்ல மானிட இனம் : இனமேம்பாட்டியலின் முக்கிய நோக்கம் நல்ல, உயர்ந்த, மானிட இனத்தை உண்டுபண்ணு வதாகும். சாதாரண பசுக்களிடமிருந்தும் காங்கேயம், ஒங் கோல் பொலிகாளைகளிளுல்சிறந்த கன்றுகளைப்பெறுகின்ருே மல்லவா? அதே முறை மானிட இனத்திற்கும் பொருந்து மன்ருே? பிரான்சிஸ் கால்ட்டன்' என்ற ஆங்கில அறிவியலறி ஞர்தான் இந்த இனமேம்பாட்டியல் இயக்கத்தைத் தோற்று வித்தவர். மக்களிடம் காணப்பெறும் பொரும்பாலான வேறுபாடுகள் பிறப்பிலேயே அமைந்தவை என்றும், நல்ல குழவிகளைப் பிறப்பித்து மானிட இனத்தையே உயர்வுடைய தாகச் செய்ய முடியும் என்றும் அவர் வற்புறுத்தினர். இன மேம்பாட்டியலறிஞர்களின் கருத்துப்படி சிலர் உடல்

96. Log Irestrstsid Erdi L – sõr–Françis Galton.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/76&oldid=1285113" இலிருந்து மீள்விக்கப்பட்டது