உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம்

11

(241) “எழில்வாய் இளவஞ்சி யும்விரும்

பும்மற் றிறைகுறையுண்

டழல்வாய் அவிரொளி அம்பலத்

தாடு'மெஞ் சோதியந்தீங் குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்

றாலத்துக் கோலப்பிண்டிப் பொழில்வாய் தடவரை வாயல்ல

தில்லையிப் பூந்தழையே’

(242) “வேனக நீண்டகண் ணாளும்

விரும்புஞ் சுரும்பரற்றுந்

2

தேனக நீண்டவண் டார்கண்ணி

யாய்சிறி துண்டுதெவ்வர்

வானக மேறவல் லத்துவென்

றான்கொல்லி மால்வரைவாய்க்

கானக வாணருங் கண்டறி

யாரிக் கமழ்தழையே”

(243) “மாணெழி லண்ணல் 3வாங்குதும் யாமே சேணுயர் சிலம்பின் யாங்கணும்

காணல மன்னோவிக் கமழ்பூந் தழையே’

99

திருக்கோவையார் 94.

பாண்டிக்கோவை 137.

பொருளியல் 41.

19. குறிப்பறிந் தேற்றல் என்பது எம்பெருமாட்டி குறிப் பறிந்தல்லது இத்தழை கொள்ளேம் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(244) “யாழார் மொழிமங்கை பங்கத்

திறைவன் எறிதிரைநீர்

ஏழாய் எழுபொழி லாயிருந்

தோனின்ற தில்லையன்ன

சூழார் “குழலெழத் தொண்டைச்செவ்

வாய்நவ்வி சொல்லறிந்தாற்

1.

மஞ்சோதி 2. விண்டவண். 3. மு. ப: வாங்கலம் யாமெஞ். 4. குழலெழிற் றொண்டை.