உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம்

11

(345) “சுடர்திரி வானிடம் போதா வகைதொல் லுலகில்வந்த கடவுளர் தாமென யானினைந் தேனெழு காசினிகாத் தடல்புரி தானை யரிகே சரிவட கொல்லியின்வாய் மடமக ளாவதை யின்றறிந் தேன்மதி வாணுதலே”

766

(346) 'இதற்கொண் டினியாந் தெளிது மேனாள் மதிக்கோ டுரிஞ்சு மால்வரை வாழ்க்கைக்

கடவு ளாக வல்லது

மடவரன் மாதரை மதித்தன்றோ விலமே"

பாண்டிக்கோவை 74.

- பொருளியல் 85.

45. குடித்திறங் கூறல் என்பது இவ்வகை சொல்லக்கேட்ட தோழி எமது தந்தையுந் தாயரும் மலைக் கானவர் ; ஏனல் எங்காவல் ; எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (347) “வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங்

கார்வரை மீன்பரப்பிச்

சேய்தந்த வானக மானுஞ்

சிலம்பதன் சேவடிக்கே

யாய்தந்த வன்புதந் தாட்கொண்ட

வம்பல வன்மலையத்

தாய்தந்தை கானவ ரேனலெங்

காவலித் தாழ்வரையே”

(348) “வானவர் நாதன் மணிமுடி

மேற்பொன் வளையெறிந்த கோனவன் ஆரம் புனைந்தவன் சூழ்பொழிற் கொல்லியின்வாய் ஏனலெங் 3காவலாம் யாய்தந்தை யிந்தப் பெரும்புனத்துக்

- திருக்கோவையார் 130

1.

மு. ப: இதற்கொண் டினியான் றெளிந்து மேனாண்

மதிக்கொடு துஞ்சு மால்வரை வாழ்க்கைக்

கடவுள ராக வல்லது

மடவரன் மாதரை மதித்தன்று மிலமே.

2. மலையில். 3. காவலர்.