உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

117

(371) “விடையிரு கோடு திருத்திவிட் டனராற்

பெடைமயி லன்ன பேதை

யிடை நயந்த வாயர் ஏற்றெழுந் தனரே”

(?)

52. 'சூளென நினைதல் என்பது ஏறுவிடுத்தலை அறிந்த தலைமகன் இன்னநாள் வரைவல் அத்துணையும் வ ஆற்றிக்கொண்டிரு நினக்கு அடைக்கலம் எனக் கைப்பற்ற அதனைச் சூளென நினைந்து தோழி கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(372) “நெய்யொன்று வேல்நெடு மாறன்தென்

னாடன்ன நேரிழையிம்

மையொன்று வாட்கண் மடந்தை

திறத்திட் டறந்திரிந்து

பொய்யொன்று நின்கண் நிகழுமென்

றாற்பின்னைப் பூஞ்சிலம்பா மெய்யொன்றும் இன்றி ஒழியுங்

கொல்லோவிவ் வியலிடமே

(373) “அம்மென் சாயல் ஆயிழை திறத்துப் பொய்ம்மை நின்வாய் உளதெனின்

மெய்ம்மை யாரோ விளம்புநர் பிறரே”

(374) “வெள்ளி விழுத்தொடி மென்கருப் புலக்கை வள்ளி நுண்ணிடை வயின்வயின் நுடங்க மீன்சினை அன்ன வெண்மணற் குவைஇக் காஞ்சி நீழல் தமர்வளம் பாடி

ஊர்க்குறு மகளிர் குறுவழி இறந்த

2ஆரல் அருந்திய சிறுசிரல் மருதின்

தாழ்சினை உறங்கும் தண்துறை ஊர

விழையா வுள்ளம் 3விழைவ தாயினும் என்றும்,

பாண்டிக்கோவை 181.

பொருளியல் 64.

1. சூளென நினைதல் புனங்கண்டழிதல் என்னுங் கிளவி விளக்கங்களும் 372 முதல் 375 முடியவுள்ள மேற்கொள் பாடல்களும் புதிதாக இணைக்கப் பெற்றன.

2. இறாஅல். 3. விழையு மாயினும்.