உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

இ. இரவுக்குறி

119

54. இரவிடங் காட்டல் என்பது இவ்வகை வறும்புனங் கண்டு வருந்திய தலைவன் தோழியை யெதிர்ப்பட்டு இரவுக்குறி வேண்டியவிடத்து அவள் இடங் காட்டுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(377) “பனைவளர் கைம்மாப் படாத்தம்

பலத்தரன் பாதம்விண்ணோர்

புனைவளர் சாரற் பொதியின்

மலைப்பொலி 'சாந்தணிந்து

சுனைவளர் காவிகள் சூடிப்பைந்

தோகை துயில்பயிலும்

சினைவளர் வேங்கைகள் யாங்கணின்

றாடுஞ் செழும்பொழிலே”

(378) 2“வந்தணங் காமன்னர் தேயமுன்

னாள்மழை 3யேறுயர்த்த

கந்தணங் காமத யானைக்

கழல்மன்னன் கார்ப்பொதியிற்

சந்தனஞ் 4சேர்ந்துதண் காந்தளம்

பூத்தழல் போல்விரியும் கொந்தணங் கீர்ம்பிண்டி 'யாங்கணின் றாடுங் குளிர்பொழிலே"

(379) “நறைகமழ் சாந்தமெஞ் சாந்தே பூவும் பொறைமலி காந்தளம் பூவே யாடிடஞ் சிறைவண் டார்க்குஞ் செயலையம் பொழிலே"

(380) “கள்ளவிழுங் காவி முடித்துக் கமழ்பசுஞ்சாந் தள்ளி முடிமேல் அழகெழுதிப்-புள்ளுறங்கும் வேங்கை மரநிழற்கீழ் நிற்பேம் வியன்சிலம்பா நாங்கள் விளையாடி நன்கு

99

- திருக்கோவையார் 154.

- பாண்டிக்கோவை 183.

பொருளியல் 69.

'கிளவித்தெளிவு.

1. சந்தணிந்து. 2. வந்திணங். 3. யேஅயர்த்த. 4. சாந்துசெங். 5. யாம்விளை யாடுங்.