உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

55. வரவு உணர்ந்து உரைத்தல் என்பது தலைமகற்குக் குறியிடங்காட்டிய தோழி தலைமகளுழைச் சென்று எய்திய விடத்து அவன் வரவறிந்தமை தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(381) “முன்னு மொருவர் இரும்பொழில்

மூன்றற்கு முற்றுமிற்றாற்

பின்னு மொருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போற் றுன்னுமொ ரின்பமென் றோகைதன்

றோகைக்கு சொல்லுவபோன்

மன்னு மரவத்த வாய்த்துயில் பேரு மயிலினமே

(382) “அணிநிற 'மாப்பக டுந்திவந்

தார்வல்லத் தன்றவியத்

துணிநிற வேல்கொண்ட கோன்கொல்லிச்

சாரலிற் சூழ்பொழில்வாய் மணிநிற மாமயி லென்னைகொல்

பொன்னேர் மலர்ததைந்த

கணிநிற வேங்கையின் மேற்றுயி லாது கலங்கினவே”

(383) “பாக்கத் திரவின்கட் பட்டதொன்

றுண்டுபைங் கானலெங்கும்

சேக்கைத் துணைத்தலை யோடொன்றுஞ்

சேர்ந்தில சேர்ந்துசெங்கை

தாக்கச் சிவந்த தடந்தோள்

தயாபரன் தஞ்சையன்னாய்

பூக்கட் கழித்தலைக் கெண்டைமுள் ளோடுண்ட புள்ளினமே'

திருக்கோவையார் 160.

-

பாண்டிக்கோவை 185.

1.

மால்பக.

அரையர் கோவை.