உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

139

சொல்லுதல். அவற்றுள் திங்கண்மேல் வைத்துச் சொல்லுதற்குச் செய்யுள் வருமாறு :

(452) “விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்

டில்லைமெல் லங்கழிசூழ்

கண்டலை யேகரி யாக்கன்னிப்

புன்னைக் கலந்தகள்வர் கண்டிலை யேவரக் கங்குலெல்

லாமங்குல் வாய்விளக்கும்

மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே”

- திருக்கோவையார் 177.

அன்னத்தின்மேல் வைத்துச் சொல்லுதற்குச் செய்யுள்

வருமாறு :

(453) "மின்கண் படாவடி வேனெடு

மாறன்விண் டார்முனைமேல்

மன்கண் படாத மயங்கிரு

ணாண்மலி நீர்த்துறைவர்க்

கென்கண் படாத நிலைமைசொல்

'லாயிளஞ் சேவறழீஇத் தன்கண் படாநின்ற வன்னத்த 2தேயித் தகவின்மையே

(454) “பறைவா யொலியோதம் பந்த ருகளுந் துறைசேர் சிறுகுடியார் துஞ்சினும் துஞ்சாய் இறையின் மருண்மாலை யெம்மோபோ னீத்த துறைவ னுடையையோ நீவாழி நாராய்’

பாண்டிக்கோவை 238.

பழம்பாட்டு.

71. கடலொடு கவலல் என்பது முன்னர்த் திங்கள் மேலும் அன்னத்தின் மேலும் வைத்துச் சொல்லினளாய்ப் பின்பு கடன்மேல் வைத்து சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (455) “பூங்கணை வேளைப் பொடியாய்

விழவிழித் தோன்புலியூ

1.

லாதிளஞ். 2. தேயால்.