உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ்வளம்

148

(486) “என்னா லிதுசெய்கென் றென்சொல்ல

மின்னா ரயிற்படைச் செங்கோல்

லாமிகற் பாழிவென்ற

விசாரிதன் வீங்கொலிநீர்த்

தென்னா டெனினும்கொள் ளார்விலை

யாத்தமர் சீர்செய்வண்டு

முன்னாள் மலரென் றணையுங்க

ணேழை முகிழ்முலைக்கே’

(487) “யானெவ னறிகோ அண்ணல் வானொடு

நானில 'முழுதும் பெறினும்

பேணா ரம்ம இவள்பூண் முலைக்கே"

11

பாண்டிக்கோவை 197.

பொருளியல் 89.

(488) “பூஞ்சுணங்கின் மென்முலைக்குப் பொன்னுலகோ போதாது

நாஞ்சில சொல்லி னனியொல்லா-தீஞ்சொற் பிறைநுத லுண்ணாட் டமரோ பெரியார் குறைவிலதாங் கொள்ளார் பிற”

(489) "கொங்கைக்குந் தூய குவளைசேர் கோகனகச் செங்கைக்கு மென்னவிலை செப்புவோம்-மங்கை தெரியா மருங்குலுக்குத் தேசம்விலை யென்னத் தரியார் மலைவாணர் தாம்”

80. உடன்

- கிளவிமாலை.

கிளவித்தெளிவு.

போக்குரைத்தல் என்பது என்பது இவ்வகைப் பரிசங்கேட்ட தலைமகன் உடன்கொண்டு போவது துணிந்தே னெனினும் நிழலு நீருமில்லாத அழல்வெங் கான மாற்ற கில்லாள் கொல்லோ வென்னுந் தலைமகற்குத் தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (490) “பிணையுங் கலையும்வன் பேய்த்தே

ரினைப்பெரு நீர்நசையால்

அணையு முரம்பு நிரம்பிய

அத்தமு மையமெய்யே

1. மு. ப: முழுவதும்.