உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கற்பொழுக்கம்

கற்பொழுக்கவகை

1. வெளிப்படை நிலை

43.

வெளிப்படை முதலா விதும்பல் ஈறாக்

களிப்பென உரைப்பது கற்பெனப் படுமே.

என்பது என்னுதலிற்றோ எனின் அறத்தொடு நிலை முதலாகப் புணர்ச்சி விதும்பல் ஈறாகக் கற்பெனப்படும் என்றவாறு. (503) “முக்கட் கூட்ட முதலா நான்குந்

தொக்கிய வொழுக்கங் கற்பெனத் தோன்றும்”

பொருளியல் 21.

என்பது (1) அறத்தொடு நிலையும், (2) உடன் செலவும், (3) இடைப்பிரிவும், (4) ஆயிடைப் பிரிவும் என வகைப்பட்ட நான்குந் தொக்கவொழுக்கம் 'முக்கட் கூட்டமுடைய கற்பென்று சிறப்பிக்கப்படுமென்று, பொருளியலுடையாரும், ‘அறத்தொடு நிலை கற்புக்கு முத’லென்று சொன்னாரென்க.

44.

அடைவாம் வெளிப்படை யாங்கே வரையும் பொருட்கேகுத லுடையா துடனிலைச் செல்லுதல் கல்விப் பிரிவுணர்த்தல் படையார் விழிக்காண காவலிற்

போகும் படியுணர்த்தல் நடையார் பகைதணித் தல்லறக் கற்பி னவிற்றுவதே.

1.

இயற்கைப் புணர்ச்சி, பாங்கனாலாய கூட்டம், தோழியாலாய கூட்டம் ஆகிய மூவழிக் கூட்டம் முக்கட் கூட்டமாம். கண்-கணு-பிரிவு. “அறத்தொடு நிலையும், உடன்செலவும், சேயிடைப் பிரிவும், ஆயிடைப் பிரிவும் எனப்பட்ட நான்கும் தொக்க ஒழுக்கமும் முக்கட் கூட்டமுடைய கற்பென்று சிறப்பிக்கப்படும்” - பொருளியல் 21.