உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

161

கொற்றவன் மாறன் முசிறியைச்

சூழ்ந்த குணகடல்வந்

தெற்றுநல் வாயெம் உயிரளித்

தேகின னேந்திழையே

99

(524) "தோழி வாழி மேனா ளொருவ னாழ்கய மருங்கி னழுந்தத்

தாழ்பெருந் தடக்கையின் வாங்கினன் தகைத்தே”

1-பாண்டிக்கோவை. ?

-பொருளியல் 94.

10. வெறிவிலக்கு என்பது இவ்வகை சொல்லக் கேட்ட தோழி வெறி விலக்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (525) “விதியுடை யாருண்க வேரி

விலக்கல மம்பலத்துப்

பதியுடை யான்பரங் குன்றினிற் பாய்புனல் யாமொழுகக் கதியுடை யான்கதிர்த் தோணிற்க வேறு கருதினின்னின் மதியுடை யார்தெய்வ மேயில்லை 2வேறினி வையகத்தே”

(526) “சேர்ந்தசங் கத்த சிறுநுதற் காகச்செவ் வேன்முருகற் கீர்ந்தசங் கத்தையிட் டாலென் பயன்கட் டிலங்கைச்செந்தீக்

கூர்ந்தசங் கத்துவிற் கோலிய

கொற்றவன் வெற்றிச்செங்கை

யார்ந்தசங் கத்தரங் கன்றிருத்

தார்கொண் டணிமின்களே”

(527) “வண்டார் இரும்பொழில் வல்லத்துத்

தென்னற்க மாறெதிர்ந்து

-திருக்கோவையார் 292.

-கோயிலந்தாதி

1. இப்பாடல் பாண்டிக்கோவைத் தொகுப்பில் இடம்பெற்றிலது. 2. கொல்லினி.