உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

தேன்றோய் கமழ்கண்ணிச் செம்பியன் மாறன்செங் கோன்மணந்த மீன்றோய் கடலிடந் தானும் 'விலையன்றெம் மெல்லியற்கே”

(540) “சான்றோர் வருந்திய வருத்தமு நுமது வான்றோய் வன்ன குடிமையு நோக்கித் திருமணி வரன்றுங் குன்றங் கொண்டிவள் வருமுலை யாகம் வழங்கினோ நன்றே யஃதான்று,

அடைபொருள் கருதுவி ராயிற் குடையொடு கழுமலந் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொ

டுள்ளி விழவின் வஞ்சியுஞ் சிறிதே”

(541) “கலந்தாங் கிளமுலைக் கற்புடை மடந்தையைக்

குலஞ்சா லொழுக்க நோக்கி

நலஞ்சா லண்ணற்கு நேர்வது நடையே”

165

-பாண்டிக்கோவை 235.

-2நற்றிணை (?)

-பொருளியல் 111.

14. வரைவு மறுத்தல் என்பது தலைவியின் சுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்து உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(542) "குன்றக் குறவன் காதன் மடமகள்

அணிமயி லன்ன வசைநடைக் கொடிச்சியைப் பெருவரை நாடன் வரையு மாயிற்

கொடுத்தனெ மாயினோ நன்றே

இன்னு மானாது நன்னுதல் துயரே”

(543) “அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்பவர் இருந்தனர் கொல்லோ

-ஐங்குறுநூறு 258.

1.

மு. ப: விலையன்ற மெல்லியற்கே. இடம்பெற்றிலது.

2.

இப்பாடல் நற்றிணைத் தொகையில்

3. வரைவு மறுத்தல், பரிசமொடு வருதல், வரைவு மலிவுரைத்தல் ஆகிய கிளவி விளக்கங்களும் 542 முதல் 548 முடியவுள்ள மேற்கோள் பாடல்களும் இணைக்கப் பெற்றன. புணர்ப்போர்.

4.