உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

181

6. செவிலி இரங்கல் என்பது தலைவியின் உடன்போக்கைத் தோழியின் வழியாக அறிந்து கொண்ட செவிலி தலைவியின் கற்பு நிலைக்கு வருந்தியுரைத்தல்.

(593) “வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்

தக்கின்று தக்கன்முத்தீக்

கெடுத்தான் கெடலில்தொல் லோன்றில்லைப்

பன்மலர் கேழ்கிளர

மடுத்தான் குடைந்தன் றழுங்க அழுங்கித் தழீஇமகிழ்வுற் றெடுத்தாற் கினியன வேயினி யாவன எம்மனைக்கே’

(594) "வேடகம் சேர்ந்தவெங் கானம் விடலைபின் மெல்லடிமேற்

பாடகம் தாங்கி நடந்த

தெவ்வாறுகொல் பாழிவென்ற

கோடக நீள்முடிக் கோன்நெடு மாறன்தென் கூடலின்வாய்

ஆடக மாடங் கடந்தறி

யாதவென் ஆரணங்கே”

(595) “அத்த நீளிடை அவனொடு போகிய முத்தேர் வெண்பல் முகிழ்நகை மடவரல் தாய ரென்னும் பெயரே வல்லா றெடுத்தேன் மன்ற யானே

கொடுத்தோர் மன்றவவ ளாயத் தோரே”

(596) “வண்டார் கோதை வரிவளைத் தோளியைப் பண்டா டிடங்களுட் காணா தின்னும்

-திருக்கோவையார் 226.

-பாண்டிக்கோவை 210.

-ஐங்குறுநூறு 380.

நில்லா வுடம்பொடு கெழீஇ

நின்றனை கொல்லோ வாழிய நெஞ்சே”

-பொருளியல் 119.

7. மென்மை கூறல் என்பது தலைவியின் மெல்லியற் றன்மையைக் கூறிச் சுரஞ் சென்றமைக்குச் செவிலி வருந்துதல்.

அதற்குச் செய்யுள் வருமாறு: