உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

சுரநனி வாரா நின்றனள் என்பது

'முன்னுற விரைந்தனிர் உரைமின்

இன்னகை முறுவலென் ஆயத் தோர்க்கே"

(636) “வளங்கெழு கானம் வருகுவ ரின்றென விளம்புமின் விரைந்தனிர் செலினே

193

-ஐங்குறுநூறு 397.

உளங்கெழு காதல் உயிரன் னோர்க்கே’

பொருளியல் 131.

22. கிளையது மகிழ்ச்சி என்பது தலைமகள் பெயர்ந்து வருதலை முன்னர் அறிந்த கிளைகள் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(637) “மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி

தான்வரு மென்ப தடமென் றோளி அஞ்சினள் அஞ்சினள் ஒதுங்கிப்

பஞ்சி மெல்லடி பரல்வடுக் கொளவே'

-பொருளியல் 132.

23. வேலனை வினாதல் என்பது மகள் வருகின்றாள் எனக்கேட்ட தாய், நம் நெடு நகர்க்கே கொண்டு வருமோ தன் கடிமனைக்கே கொண்டு போமோ என அவன் குறிப்பறிதற்கு வேலனை வினாவுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(638) “அங்கண் மலர்த்தார் அரிகே

சரிதென்னர் கோனயில்வேல்

வெங்கண் நெடுஞ்சுரம் மீண்ட

விடலை கெடலருஞ்சீர்

நங்கள் மனைக்கே வரநல்கு

மோசொல்லு வேலநல்கு

தங்கள் மனைக்கே செலவுய்க்கு

மோமற்றென் தையலையே

99

(639) “உருமினை நீள்கொடி மேற்கொண்ட செங்கோல் உசிதனெங்கோன் செருமுனை போற்சுர மீண்ட விடலையெந் தீதில்செல்வத்

1. முன்னுறச் செல்வீர். (பா-ம்.) 2. போல்.