உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

76.

91.

439.

இளங்குமரனார் தமிழ்வளம் 11

டங்

நிரம்பிய கழிவாய் இடத்து. புள்ளினம் சேர்ந்தில என்க. பூக்கட் கழித்தலை என்றதால் தலைவன் வந்து நின்ற இட குறித்தாளாம்.

இன்னிசைமாலை (2)

-

தேனகு முல்லை - தேன் வழியும் முல்லை மலர். மீனகு வாண் மதி - விண்மீன்களை ஒளியால் இகழும் ஒளிமிக்க மதியம். முல்லையிடையே கூதாள மலர்விரிதல் விண்மீன் இடையே மதியொளிவிடல் போன்றதாம். கடன் முறைமை. இனையும் எனல் - வருந்தும் என்பது. இனையு மெனல் கடனோ என்க. கூதாளம் ஒருவகைச் செடி; அரங்குவித்த - அழித்த. இரங்குவித்த - வருந்தச் செய்த. பாடலின் முன்னிரண்டடிகளும் சிதைவுற்றன.

ஐந்திணை (1)

-

அருவி நீந்துங்கால் அல்லல் ஏதேனும் நினக்கு நிகழ்ந்து விடுமாயின் என்கோதை என்னாவாள் என்பதாம். நெஞ்சு என்னாவள் என்னும் என்பது பேசாதன பேசுவது போலக் கூறும் கூற்று. வழியின் அச்சங் கூறி வரைதலை வலியுறுத்தியது.

கண்டனலங்காரம் (12)

102. திங்கள் குளிரும் - திங்களைப்போல் தண்மைசெய்யும். தரளக்குடை - முத்துக்குடை. தலைவியைப் பூங்கொடியாக உரைத்தது.

121.

129.

141.

அல்லித் திருமங்கை - செந்தாமரை மலர்மேல் அமர்ந்த திருமகள். மன்னனை மாலாகச் சொல்வது மரபாகலின் கூறினார்.

குழைமுகம், கொங்கை, மருங்கு, நாட்டம் (பார்வை) ஆயவற்றான் நல்லாளாம் என்க. புல்லார் பகைவர் ; அவராவார் பொருந்தாதவர்.

-

புண்டரிகம் - புலி. வண்டின் கிளையலம்புதல் - தேனுண்டு ஒலித்தல். கார்நீழல் கூந்தல். கெண்டை, கண்கள்.

செந்தாமரை, முகம்.

167. விரை - மணம். மாது - திருமகள். கருதார் - பகைவர் ; கண்ட ன்வீரங் கருதாதார் போன்ற களிறு வந்ததோ? அடியுறு நடையிடும்.

-