உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

580.

24.

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

-

நணியில்லை - அருகில் இல்லை. 'நணித்தில்லை' என்பதும் பாடம். வெம்முரட் செல்வன் - கதிரோன் ; கொடிய வெம்மையால் வருத்துவோன். கதிரும் ஊழ்த்தனன் கதிர்களை விரித்தனன். ஊழ்த்தல் - விரித்தல். 'இணர் ஊழ்த்தும் நாறா மலர்' என்றார் திருவள்ளுவர். சேந்தனை - தங்கி. இவளோ இளையள், மெல்லியள் ; ஆறோ, அரிய, சேய ; ஆகலின் தங்கினை சென்மோ என்க.

தில்லை யந்தாதி (1)

தொடி - வளையல். வான் அர மங்கை - தெய்வப் பெண். கண்ணிமைத்தல், அடி நிலந் தோய்தல் மலர் வாடல் ஆயவற்றால் அரமகள் அல்லள் மானிட மகள் என்று தெளிந்தானாம். அயன் நான்முகன். தடிதல் - அறத்தல். வானரம் வல்லிக்கொடி ஊசல் எனப் புரியும் தில்லைப் பொழில் என்க. கோல் - அழகு ; திரட்சியுமாம்.

நறையூ ரந்தாதி (1)

·

485. நல் - நன்மை. நகைத்தல் - நோக்கி மகிழ்தல். நுதல் - நெற்றி. வில் இவண் புருவத்தைக் குறித்தது. சொல் அளந்தான் - சொல்லை ஆய்ந்து கணக்கிட்டுத் தெளிந்தவன். துறையூர் நறையூர் துறையூரை அடுத்த நறையூர். சொல் லளந்தானுக்கு நெல்லளந்தான் நறையூர் என்க. நுதற்கு விலை நறையூர் நாட்டிற்கு நேர் நிற்கும் என இயைக்க. நல்லளந்தாள், அமுதளந்தாள் என்பன உமையையும் திரு மகளையும் சுட்டுவது போலும்.

50.

138.

-

பல்சந்த மாலை (8)

-

6

கலைமதி கலைகள் அனைத்தும் நிரம்பிய முழுமதி. கலைமதி யன்ன வாய்மை. தேரங்கமும் தேர் முதலிய அரச உறுப்புக்களும். அந்நிதமுறு வானத்தொடு பொருந்திய, மேகந் தழுவிய. வாள் நுதல் - ஒளியமைந்த நெற்றியை யுடையாள். முன்னுவன் - நினைப்பேன். நாட்டம் - கண். நவகண்டம் மேல் ஈட்டு அம்புகழ் - ஒன்பது கண்டங்களிலும் திரண்ட சிறந்த புகழாளன். ஒன்பது கண்ட மாவன: கீழ் விதேகம், மேல் விதேகம், வட விதேகம், தென் விதேகம், வட விரேபதம், தென்னிரேபதம், வடபரதம், தென்பரதம் மத்திம கண்டம். (சூடாமணி நிகண்டு 12 : 99) வின்னன் - பாட்டுடைத் தலைவன் பெயர்.