உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

17.

18.

19.

112.

190.

இளங்குமரனார் தமிழ்வளம்

11

உடனிலைப் பாலை. உடன் போக்கு எனப்பெறும் பாலை. இரு வீற்றும் - களவு, இயல்பு என்னும் இரு பகுதியினவும். கலவி - புணர்ச்சி. ஒருதலை -ஒருபால். கேட்போர் இல்லாக் கிளவி - கேட்போர் இல்லாமல் தானே கூறும் சொல். அகத்திணைப் புறம் - அகப்புறம். அகத்தொடும் சேராதது; புறத்தொடும் பொருந்தாதது.

தலைவி நின்ற இடம் ‘பனித்தடம்' என்னம் இப்பாடல் சிதை வடைந்ததுள்ளது. கொந்து - கொத்து.

-

யாதான் யாதுதான். "குடந்தைச் சுனைநீர் குளிர்ந் திருக்கும் ; யாதான் ஆடினீர்”

குடந்தை - திருக்குடந்தை ; கும்பகோணம்.

191.

193.

பாடல் சிதைந்து போயிற்று.

196.

198.

201.

204.

231.

237.

238.

பொருகளிமால் யானை

-

போர் வல்லதும் களிப்

புடையதும் பெரியதும் ஆகிய யானை. கிள்ளி - சோழன். அலமரும் - துயரால் சுழலும். சிறை - சிறகு. மாயிரும் சிலம்பு - மிகப்பெரிய மலை. மதுவழிந்த - தேன் வழிகின்ற. கூழை - கூந்தல்.

-

கதிரன் பாட்டுடைத் தலைவன் போலும். அவனூர் பழையனூர் என்க. 'பழையனூர்க் காரி’ என்பது ஔவையார் வாக்கு. கோடு - யானைத் தந்தம். நரந்தம் - கத்தூரி ; நரந்தம் ஒருவகைப் புல்லுமாம். 'நரந்தம் நாறும் தன்கையால்' என அதியமானைப் பாடினார் ஒளவையார். “மது மறைந்து உண்டோர் மகிழ்ச்சி போல இவரும் தம்முள் மகிழ்ப; கண்ணால் சொல்லும் ஆடுப்” எல்லை - அளவை. ஒரு சிறை - ஒரு பக்கம். எற்குறையுறுதிர் - என்னிடம் குறையுற்று நிற்கின்றீர். சொற்குறை எம்பதம் - சொற்குறை யுடைய என் அளவில்.

திறை - அரசிறை. தலைவன் ஆகலின் வலைஞர் திறையாகத் தந்த உணங்கல் என்க. மூரி-வலிய உணங்குமுன்றில் - காய வைத்த முற்றம். சேர்ப்பர் - கடற்கரைத் தலைவர். “சேரப் புலால் சேருமோ?" என இயைக்க.

முண்டகம் - கடல் முள்ளி. அதிகன் குலம் என்றது மேம் பட்ட அரசர் குலம் எனக் குறித்தது. குவளை முடிப்பார், கடல் முள்ளிப் பூவை முடியார் என்றமையால் தம் குலத் தாழ்வை உரைத்தாளாம்.