உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை க

உரிப்பொருள்

17

இனி, உரிப்பொருள் ஆவது திணைக்கு உரிய பொருள் என்றவாறு. அவை யாவையோ எனின், புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், அவற்றின் நிமித்தம் என இவை. என்னை?

(12) “புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே

என்றராகலின். அவற்றுள்.

அகத்திணையில் 16.

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி ; பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை ; இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை ; இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் ; ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம்.

புணர்தலே கொல்லோ குறிஞ்சி எனின், புணர்தலே அன்று. பிரிவச்சமும், 'வன்புறையும், தலைமகன் நீங்கினவும், பாங்கற்கு உரைத்தனவும், பாங்கன் கழறினவும், தலைமகன் எதிர்மறுத்தனவும், பாங்கன் எதிர்ந்தனவும், தலைமகளைக் கண்டனவும், ஆற்றானாயினவும், தலைமகன் சென்றனவும், தலைமகன் 2தலைப் பெய்தனவும் இத்தொடக்கத்தனவெல்லாம். தலைமகட்கும் தோழிக்கும் இவ்வகையானே நோக்கி 3விகற்பிக்க 4இறப்பவும் பலவாம். அவையெல்லாம் புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாய் அடங்கும். அடங்கும். ஏனையவற்றிற்கும் இவ்வாறே கொள்க.)

... ...

... ... ...

...

...

...

(1-12)

இவற்றுள், கரு மயங்கியும் வரப்பெறும். என்னை? (13) “உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே”

என்றார் ஆகலின்

- தொல்.அகத்திணையியல் 15.

...

... ... ... ... ... ... ...

... ... ...

...

...

... ...

1.

வற்புறுத்தல். 2. ஒன்றாய்க் கூடுதல் 3. வேறுவேறாக விரித்துக்காட்ட. 4. மிகவும்.

(13)