உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம்

(14) “காரே கூதிர் முன்பனி பின்பனி சீரிள வேனில் வேனில் என்றாங் கிருமூ வகைய பருவம் அவைதாம் ஆவணி முதலா விரண்டிரண் டாக

11

மேவிய திங்கள் எண்ணினர் கொளலே

- திவாகரம். தொகுதி. 1.

என்னு மிலக்கணத்தால், ஆவணியும் புரட்டாசியும் கார் ;

ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் ;

மார்கழியுந் தையும் முன்பனி ;

மாசியும் பங்குனியும் பின்பனி ;

சித்திரையும் வைகாசியும் இளவேனில் ;

ஆனியும் ஆடியும் வேனில் ;

என அறுவகைப்பட்ட வாறுங் கண்டு கொள்க.

இனி மூவகைப்பட்ட நான்கு திங்கட் கூடியதொரு பருவமாக என்றவாறு. என்னை?

(15) “ஈரிரு திங்கட் பருவ மொன்றாக

மூவகை யியற்றாய் மொழிகுவ ருளரே"

என்றாராகலின்.

அவை வருமாறு : ஆவணியும் புரட்டாசியும் ஐப்பசியும் கார்த்திகையும் கொண்டது கார்;

மார்கழியும் தையும் மாசியும் பங்குனியும் கொண்டது பனி; சித்திரையும் வைகாசியும் ஆனியும் ஆடியுங் கொண்டது

வேனில்.

1

இன்னு முன் சொன்ன நிலங்களைக் குறிஞ்சியும் நெய்தலுங் கள வென்றும் வையிரு ணைகளையும் இயல்பென்றும் உரைப் பாரும் உளர். “உடனிலைப் பாலை களவும் இயல்புமாம்”

என்னை?

(16) “குடவரை குறிஞ்சியும் குணகடல் நெய்தலும்

... ...

...

... ... ... ... ... ... ..

... ... ...

ஒருதனிக் காதல் ஒழிந்தன இயல்பே

(17) “உடனிலைப் பாலை இருவீற்று முரித்தே’ என்றாராகலின்.

...

1. முல்லையும் மருதமும்.

(15)