உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய

களவியற் காரிகை

19

(பதினாறாம் நூற்பா முதல் இருபத்தொன்றாம் நூற்பா முடிய எண்வகை மணமும் அவற்றிற் குகாரணமும் அறிவித்தன என்பது விளக்கமாகின்றது. அவ்விலக்கணம் இறையனார் களவியல் உரையைத் தழுவிச் தழுவிச் செய்யப்பெற்ற. செய்யப்பெற்ற. செய்யுள் வடிவுடைய தென்பது சிதைவுடன் கிடைத்துள்ள பகுதியால் அறியக் கிடக்கின்றது. ஆதலால், இறையனார் அகப்பொருளில் கூறப்பெறும் எண்வகை மணம் பற்றிய செய்தி இவண் தரப்பெறுகின்றது.)

பிரமம் என்பது 'நாற்பத் தெட்டியாண்டு பிரமசரியங் காத்தாற்குப் பன்னீராட்டைப் பிராயத்தாளை அணிகலன் அணிந்து கொடுப்பது. கொடாவிடின் ஓர் இருதுக் காட்சி ஒருவனைச் சாராது கழிந்த விடத்து ஒரு பார்ப்பனக் கொலையோடு ஒக்கும் என்பது. இதனை அறநிலை என்றுணர்வது.

பிரசா பத்தியம் என்பது, மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது. இதனை ஒப்பு என்று உணர்வது.

ஆரிடம் என்பது, ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப் பொற்குளம் பினவாகச் செய்து அவற்றிடை நீரிற் கொடுப்பது. இதனைப் பொருள்கோள் என உணர்வது.

தெய்வம் என்பது வேள்வி ஆசிரியற்கு வேள்வித் தீமுன் வைத்துக் கொடுப்பது. இதனைத் தெய்வம் என்று வழிபடப்பட்டது.

காந்தர்வம் என்பது, இருவர் ஒத்தார் தாமே கூடும் கூட்டம். இதனை யாழோர் கூட்டம் என்று உணர்வது.

அசுரம் என்பது, கொல்லேறு கொண்டான் ான் இவளை எய்தும், வில்லேற்றினான் இவளை எய்தும், 2திரிபன்றி எய்தான்

1. களவியற் காரிகையார் குறிப்பும் இஃதாதலை,

66

'இருப...ண் டெழிற்பிர மங்காத்தவற்

கொருபதின் மேலிரண் டாண்டின டன்னை யுவந்தளித்

தருள்வ தறநிலைய... யதனைப்

பெருமறை யோன்கொலை யொன்றோடொப் பாமென்று பேசினரே

என்னும் சிதைவுற்றுள்ள நூற்பாவானறிக.

66

2.

"ஆசுரமாவது, கொல்லேறு கோடல், திரிபன்றி எய்தல்,

வில்லேற்றுதல் முதலியன செய்து கோடல்”

- தொல். களவு. 1. நச்.

“அருந் திரிபன்றி எய்த அருமகன்”

திரிபன்றி யாவது ஒரு பொறி.

- சீவக. 2177.