உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. களவொழுக்கம்

களவொழுக்க வகை

உங. தெய்வப் புணர்ச்சியும் பாங்கனிற் கூட்டஞ் செவிலிதரூந் தையற் புணர்ச்சிப் பகற்குறி தானு மிரவினிற்சார்ந் துய்தற் குறியும் வரைவு கடாவுடன் போக்குணர்வு மெய்யுற் றியல்பா லமையுங் களவொழுக் காமென்பரே.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், 'தமிழ் நெறி விளக்கத்திற் பொருளியலுடையாருங் களவொழுக்கம் ஆறு வகைப்படும் என்றார். அவையறிவித்தலைக் கருதிற்று. அவையாவன: தெய்வப் புணர்ச்சியும். பாங்கற் கூட்டமும், தோழியாலாய கூட்டத்திற் பகற்குறியும், இரவுக்குறியும், வரைவுகடாதலும், உடன்போக்கு வலித்தலும் என அவற்றை அறிந்து கொள்க.

1. அகப்புறம்

உச. காட்சியொ டையந் தெளித லெனத்தனி கட்டுரைத்த

வேட்கையின் மூன்று மொருதலைக் காம மென(மி)குந்தோர்

மாட்சிமை தோன்று (மதியாற் சொன்னார்) கள் மதிநுதல்வேய்த் தோட்சிறு கோங்கரும் பாமென் முலைப்பூண் டுடியிடையே.

(23)

இக்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், ஒருதலைக் காமமென்னும் அகப்புற முணர்த்துதல் நுதலிற்று. என்னை? (18) “காட்சி முதலாக் கலவியின் ஒருதலை

வேட்கையிற் றோன்றுதல் கைக்கிளை யதுதான் கேட்போ ரில்லாக் கிளவிய தாகும்'

என்றாராகலின். என்னை?

1.

காட்சி மையந் தெளிதலென. இவற்றுள் காட்சி என்பது :

களவொழுக்கம் தெய்வப் புணர்ச்சியும், பாங்கற் கூட்டமும், தோழியிற் கூட்டத்துப் பகற்குறியும், இரவுக் குறியும், வரைவு கடாதலும், உடன்போக்கு வலித்தலுமென ஆறாம். பொருளியல். 14.