உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம்

11

1"மால்வரை புரையு மாடக் கூடல்

ஆல வாயிற் பால்புரை பசுங்கதிர்க்

குழவித் திங்களைக் குறுங்கண்ணி யாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுளாற்"

செய்யப்பட்ட 2பொருளதிகாரத்தின் பொருட்டிறம் புரிந்தொழுகு மோங்கிய தலைமகன், தெய்வம் இரை நிற்கப் பான்மையால் உய்க்கப்பட்டுக் 3“கற்கந்தும் 4எறிபோத்தும் கடுங்கண்யானையும் தறுகட் பன்றியும் கருவரையும் இருநிலனும் பெருவிசும்பும் அனையார் ஆளி மொய்ம்பினர் அரிமான் துப்பினர் பற்பல் நூறாயிரவர் கூர்வேல் இளையர் தற்சூழச் செல்வன். தலை மகளும், உடன்பிறந்து உடன் வளர்ந்து நீர் உடனாடிச் சீருடன் பெருகி 5ஓல் உடனாட்டப் பாலுடன் உண்டு, பல்லுடன் எழுந்து சொல்லுடன் கற்றுப் பழமையும் பயிற்றியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையார் பற்பல் நூறா யிரவர் கண்ணும் மனமும் கவரும் ஒண்ணுதல் மகளிர் தற்சூழத் தாரகை நடவண் தண்மதிபோலச் செல்வாள்.

ஒருவர் ஒருவரின் முன்னர்த் தழைவிழைதக்கன தொடுத் தும் என்றும், கண்ணி தண்ணறு நாற்றத்தன செய்தும் என்றும், போது மேதக்கன கொய்தும் என்றும், மயிலொடு மாறாடுதும் என்றும், குயிலொடு மாறு கூவுதும் என்றும், அருவியாடி அஞ்சுனை குடைதும் என்றும், வாசமலர்க் காடியில் ஊசலாடுதும் என்றும், அப்பாலுள்ளார் இப்பாலுள்ளாள் கொல்லோ என்றும், இப்பாலுள்ளார் அப்பாலுள்ளாள் கொல்லோ என்றும் இவ்வகை நினைத்துப் பிரிப.

இவ்வகை அவளைத் தமியளாய்ப் பிரிபவோ எனின், எட்டியுஞ் சுட்டியுங் காட்டப்படுங் குலத்தள் அல்லளாகலானும், பான்மை அவ்வகைத்தாகலானும் பிறவாறு நினையார் பிரிப. ஆயின், இவ்வகைப்பட்ட ஆயத்திடை மேனாள் பிரிந்து பயின்றறியாதாள் தமியளாய் நிற்குமோ எனின் நிற்கும்; தான் பயின்ற இடம் தன் ஆயத்தினோடு ஒக்கும் ஆகலான்.

யாங்ஙனம் நிற்குமோ எனின், சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும் ஆசினியும் அசோகும் கோங்கும் 1. இறையனார் அகப்பொருள் : 1. ஆக்கியயோன் பெயர்.

2.

3.

4.

பொருளதிகாரம் என்றது இறையனார் அகப்பொருளை.

இறையனார் அகப்பொருள் : 2. காட்சி. கற்கந்து-கற்றூண். கொல்புலி.

5. ஒலி. “கறங்கு வெள்ளருவி ஓலின் துஞ்சம்

99

கலி. 42 : 3.