உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

27

1. நயப்பு என்பது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் தலைமகள் கேட்ப விருப்புரைத் தயர்வு நீக்குதல். என்னை?

(30) “அழிவுபட ரெவ்வங் கூர ஆயிழை

பழிதீர் நன்னலம் பாராட் டின்று”

வெண்பாமாலை 10 : 6.

என்றாராகலின். அதற்குச் செய்யுள் வருமாறு :

(31)

(32)

(33)

“கூம்பலங் கைத்தலத் தன்பரென்

பூடுரு கக்குனிக்கும்

பாம்பலங் காரப் பரன்றில்லை

யம்பலம் பாடலரிற்

றேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள் தீங்கனி வாய்கமழும் ஆம்பலம் போதுள வோவளி காணும் மகன்பணையே”

"வேறும் மெனநின் றிகல்மலைந் தார்விழி ஒத்து விண்போ யேறுந் திறங்கண்ட கோன்றென் பொதியி லிரும்பொழில்வாய்த் தேறுந் தகையவண் டேசொல்லு மெல்லியல் செந்துவர்வாய் நாறுந் தகைமைய வே*யரக் காம்பல் நறுமலரே"

"கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோநீ யறியும் பூவே"

- திருக்கோவையார் 11.

பாண்டிக்கோவை 4.

குறந்தொகை 2.

  • (பா. வே) யணி யாம்பல்.