உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

தாக்கமர் பாங்கன் றனதுளந் தானே தனைவரைத்தல் வீக்கமழ் தாழ்பொழில் சூழிடந் தன்னை வினவுதலே. 27. வினவுந் தகைமை யிடத்தியல் கூறல் மிகவிளங்கச்

28.

சொனநன் குறிவழிச் சேற லிடங்கண்டு தான் துணிதல் (வினை)கொண் டிறைவனைத் தானே வியத்தல் எழில்சிறந்த வனிநின் றிடுநிலை கூறல் அவயவந் தேறுதலே. தேறும் பொழில் தனைக் கண்டு வியத்தல் திருவேயெனல் மாறும் படியன்றி யாற்றான் கிளத்தல் மருங்கணைதல் ஊறும் புணர்ச்சி மகிழ்த லிருத்தலென் றொண்புலவோர் கூறுங் கிளவிகள் ஈரொன் பதுபாங்கன் கூட்டிடமே.

35

ச் சூத்திரம் மூன்றும் என்னுதலிற்றோ வெனின், பாங்கற் கூட்டம் பதினெட்டு வகைப்பட்ட கிளவியாம் என்ப தறிவித் தலைக் கருதிற்று. என்னை?

(1) உற்றதுவினாதலும், (2) உற்ற துறைத்தலும், (3) கழறலும், (4) கழற்றெதி ருரைத்தலும், (5) உளங்கவன் றுரைத்தலும், (6) இடம் வினாதலும், (7) இடத்தியல் புரைத்தலும், (8) குறிவழிச் சேறலும், (9) இடங்கண்டு துணிதலும், (10) இறைவனை வியத்தலும், (11) நிலை கூறு கிளவியும், (12) அவயவந் தேறலும், (13) பொழில் கண்டு வியத்தலும், (14) திருவென வுரைத்தலும், (15) ஆற்றான் கிளத்தலும், (16) மருங்கணைதலும், (17) புணர்ச்சி மகிழ்தலும், (18) இருத்தலும் என்றவாறு.

1. அவற்றுள், உற்றது வினாதல் என்பது பிரிந்த தலைமகள் வேறுபாடு கண்டு பாங்கன் வினாதல். அதற்குச் செய்யுள்: (64) "சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்ப

லத்துமென் சிந்தையுள்ளு

முறைவா னுயர்மதிற் கூடலி

னாய்ந்தவொண் டீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனை யோவன்றி

யேழிசைச் சூழல்புக்கோ

இறைவா தடவரைத் தோட்கென்கொ

லாம்புகுந் தெய்தியதே

திருக்கோவையார் 20.