உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

1

...

...

... ... ... ...

...

...

... ...

...

...

41

(85) "(காண்குவி ராயிற் கழறலிர் மன்னோ

பூண்புனை வளரிள வனமுலை

மாண்குழை மாதர் மடங்கெழு நோக்கே"

-பொருளியல். 9

5. உளங்கவன் றுரைத்தல் என்பது தலைமகன் தனது ஆற்றாமையின் கழற்றெதிர் மறுத்துரைப்பக் கேட்ட பாங்கன் கவன்றுரைத்தது. அதற்குச் செய்யுள் :

(86) "விலங்கலைக் கால்விண்டு மேல்மே

லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்

கலங்கலைச் சென்றவன் றுங்கலங்

காய்கமழ் கொன்றைதுன்றும்

அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்

தானரு ளில்லவர்போல்

துலங்கலைச் சென்றிதென் னோவள்ள லுள்ளந் துயர்கின்றதே

(87) “வன்தாட் களிறு கடாஅயன்று

வல்லது மன்னவியச்

சென்றான் கருங்கயல் சூட்டிய

சென்னிச்செம் பொன்வரைபோல்

நின்றான் நிறையும் அறிவுங்

கலங்கி நிலைதளரும்

என்றால் தெருட்டவல் லாரினி

யாரிவ் விருநிலத்தே”

(88) "புலந்துறை போகிய நெஞ்சுநிறை யழிந்து

கலங்குவ தாயின் மாதோ

சிலம்பனை யாரோ தெளிக்குநர் பிறரே”

திருக்கோவையார் 24.

பாண்டிக் கோவை 35.

1.

- பொருளியல் 10.

85 முதல் 90 முடியவுள்ள எடுத்துக் காட்டுக்களும், உளங்கவன்றுரைத்தல் இடம் வினாதல் என்னும் கிளவி விளக்கங்களும் புதியனவாக இணைக்கப் பெற்றன.