உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

(101) “காதுடனே காதுங் கயலிரண்டுஞ் செங்கமலப் போதுடனே நின்று புடைபெயரத்-தாதுடனே வண்டாடுஞ் சோலை மயில்போல் வரிப்பந்து கொண்டாட நான்கண்டேன் கொம்பு

(102) "கொங்கை அரும்பாக் குழலளகம் வண்டாக அங்கை தளிரா அலர்விழியாத்-திங்கள் குளிருந் தரளக் குடைக்கண்டன் கொல்லி ஒளிதருங் கொம்பொன் றுளது

(103) “முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

45

- கிளவித் தெளிவு.

கண்டனலங்காரம்.

- திருக்குறள் 1113.

8. குறிவழிச் சேறல் என்பது இடத்தியல் புரைப்பக் கேட்ட பாங்கன் அவ்விட நோக்கிச் சேறல். அதற்குச் செய்யுள் வருமாறு; (104) "குயிலைச் சிலம்படிக் கொம்பினைத்

தில்லையெங் கூத்தப்பிரான்

கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்குங் கருங்கட்செவ்வாய் மயிலைச் சிலம்பகண் டியான்போய் வருவன்வண் பூங்கொடிகள் பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறையே”

(105) “பொன்னங் கனைகழற் பூழியன்

பூலந்தைப் போர்மலைந்த தென்னன் பொதியிற் செழும்புனங் காக்குஞ் சிலைநுதற்பூ

ணன்னந் தனையா ரணங்கினை யாடமைத் தோளியையேழ்

மன்னுங் கடலமு தந்தனைக் கண்டு வருகுவனே"

திருக்கோவையார் 30.

பாண்டிக் கோவை 40.