உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

12. அவயவந் தேறுதல் என்பது குறிவழிச் சென்று மீண்ட பாங்கன் தலைவி நிலை கூறத் தலைமகன், (தலைமகள் அவயவங்களை நினைந்து அவள் என் உயிரே எனத் தேறுதல்). அதற்குச் செய்யுள் வருமாறு :

(123) “எயிற்குல மூன்றிருந் தீயெய்த

வெய்தவன் தில்லையொத்துக்

குயிற்குலங் 'கொண்டதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தநிரைத்

தயிற்குல வேல்கம லத்திற்

கிடத்தி யனநடக்கு

மயிற்குலங் கண்டதுண் டேலது வென்னுடை மன்னுயிரே'

(124) "பொதியிலந் தேன்மலைப் பூழியன்

66

பூலந்தை போர்மலைந்தான்

பதிவளங் கொண்டு பவளத் திடைநித் திலம்பதித்து மதியிடந் தன்னிற் குவளை

செலுத்தியோர் வஞ்சிநின்ற அதிசயங் கண்டனை யேயது வேயென தாருயிரே”

-திருக்கோவையார் 36.

(125) வண்டே றியகுழலும் வாளைபாய் வள்ளையிளந் தண்டே றியகுழையுந் தாழ்வடமும்-கொண்டே

யிளவேய் நிகரிருந்தோள் ஏந்திழையை மானிற் களவேய் விழியை அறி”

பாண்டிக்கோவை 51.

பழம்பாட்டு.

13. பொழில் கண்டு வியத்தல் என்பது என்பது இவ்வகை அவயவந்தெளிந்த தலைமகன் றான்புகுந்த பொழி(ல் கண்டு வியத்தல்). அதற்குச் செய்யுள் வருமாறு :

1. கொண்டு தொண்.