உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

55

16. மருங்கணைதல் என்பது (நாணினாற் கண் புதைக்க) இவ்வகை சொல்லி ஆற்றானாய தலைமகன், தலைமகட்குக் குழலுங் கோதையுந் திருத்துவானாய்ச் சென்று அணைத(லைச் சொ)ல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(143) “கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக்

கஃதே குறைப்பவர்தம் சீலத் தனகொங்கை தேற்றகில் லேஞ்சிவன் றில்லையன்னாள் நூலொத்த நேரிடை நொய்ம்மையெண்

ணாதுதண் டேனசையாற்

சாலத் தகாதுகண் டீர்வண்டு

காள்கொண்டை சார்வதுவே

(144) “நாமே யிடையுள்ள வாறறி

வாமினி நாங்கள் சொல்ல

லாமே மருதன் மருத

வனத்தன்ன மன்னவரைப் பூமே லணிந்து பிழைக்கச்செய்

தாரொரு பொட்டுமிட்டார் தாமே தளர்பவ ரைப்பார மேற்றுதல் தக்கதன்றே”

""

திருக்கோவையார் 45.

திருவிடை மருதூர் மும்மணிக்கோவை 15.

(145) 1"தேந்தண் பொழிலணி சேவூர்த் திருந்தார் திறலழித்த

வேந்தன் விசாரிதன் தெவ்வரைப் போன்மெலி விக்குமென்றுன் பூந்தடங் கண்புதைத் தாய்புதைத் தாய்க்குன் பொருவில்செங்கேழ்க்

காந்தள் விரலுமன் றோவெம்மை யுள்ளங் கலக்கியதே”

பாண்டிக்கோவை 54.

1.

145 முதல் 151 முடியவுள்ள எடுத்துக் காட்டுக்களும், புணர்ச்சி மகிழ்தல், இருத்தல் ஆகிய கிளவி விளக்கங்களும் புதியனவாக இணைக்கப் பெற்றன.