உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம்

11

பொருமால் களிறொன்று போந்ததுண் டோநும் புனத்தயலே”

பாண்டிக்கோவை 64.

(166) “செம்முக மானதர் செங்குங்கு மப்புயர் சீர்திறந்த மைம்மலி வாசப் பொழில்வாய் மதியன்ன வாணுதலீர் மும்மத மாரி பொழியப் பொழிமுகில் போல்முழங்கிக் கைம்மலை தான்வரக் கண்டதுண் டோநும் கடிபுனத்தே”

(167) “சீத விரைக்கனகச் செந்தா மரைப்பொகுட்டு மாதனையீ ரம்போடு வந்ததோ-சோதிப் பொருதாரை வேற்கண்டன் பூபால தீபன் கருதாரி னிங்கோர் களிறு”

- பல்சந்தமாலை.

கண்டனலங்காரம்.

3. கலைவினாதல் என்பது தலைமகளுந் தோழியும் இருந்த இடத்துச் சென்று சிலமான் போந்தன உளவோ எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(168) “கருங்கண் ணனையறி யாமைநின்

றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்

வருங்கண் ணனையவண் டாடும்

வளரிள வல்லியன்னீர்

1பொருங்கண் ணினைய கணைபொரு

புண்புண ரிப்புனத்தின் மருங்கண் ணனையதுண் டோவந்த தீங்கொரு வான்கலையே

(169) “சிலைமாண் படைமன்னர் செந்நிலத் தோடச் செருவிளைத்த

கொலைமா ணயின்மன்னன் றென்புன னாடன்ன கோல்வளையீர் இலைமாண் பகழியி னேவுண்டு தன்னினத் துட்பிரிந்தோர் கலைமான் புகுந்ததுண் டோவுரை யீருங்கள் கார்ப்புனத்தே’

1. இருங்கண் ணனைய. 2. னேறுண்டு.

- திருக்கோவையார் 53.

பாண்டிக்கோவை 24.