உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

63

(170) 1"அம்பு முகங் கிழித்த வெம்புண் வாய கலைமான் போந்தன உளவோநும் மடமா னோக்க மரீஇயின படர்ந்தே"

(171) 2“நறைபரந்த சாந்த மறவெறிந்த நாளால்

உறையெதிர்ந்து வித்தியவூ ழேனற்-பிறையெதிர்ந்த தாமரை போன்முகத்துத் தாழ்குழலீர் காணிரோ வேமரை போந்தன வீண்டு

பொருளியல் 24.

-3 திணைமாலை நூற்.

(172) “தத்திச் சிலைத்தெழுந்து தார்குருதி மெய்சோர இத்திக்கில் இந்தப் புனத்திடையே-தித்தித்தேன் போந்தனைய சோர்குழலீர் யானெய்த போதொருமான் போந்ததே இவ்வழியே புக்கு

99

பழம்பாட்டு.

4. வழி வினாதல் என்பது நும் ஊர்க்கு வழி சொல்லுமின் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(173) “சிலம்பணி கொண்டசெஞ் சீறடி

பங்கன்றன் சீரடியார்

குலம்பணி கொள்ள வெனைக்கொடுத் தோன்கொண்டு தானணியுங் கலம்பணி கொண்டிட மம்பலங் கொண்டவன் கார்க்கயிலைச்

சிலம்பணி கொண்டநுஞ் சீறூர்க் குரைமின்கள் சென்னெறியே”

1. மு.ப. "அம்புமுகங் கிழித்த புண்வாய்க் கலைமான்

போந்தன உளவோ வுரையீர்

மாமட நோக்க மரீஇயின படர்ந்தே

2.

நறைபடர்.

-பொருளியல்

3. மு. ப: திணைமொழி.

திருக்கோவையார் 54.