உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

மன்னுஞ் சுடர்மணி 'போந்துகு மோநுங்கள் வாயத்தே”

(178) “விந்தா சனிகொண்கன் வேந்தரி லாண்பிள்ளை வென்றிவெற்பிற் கொந்தார் தினைப்புனங் காவனிற் பீர்வழி கூறுமென்று வந்தார் சிலர்க்கு வழியறி

வாரொரு வார்த்தைசொன்னாற் சிந்தாது காளூணும் பவழச்செவ் வாயிற் றிருமுத்தமே”

இவ்வகை பிறவும் வந்தன வெல்லாம், (179) "இரந்து குறையுறாது கிழவியுந் தோழியும் ஒருங்குதலைப் பெய்த செவ்வி நோக்கிப் பதியும் பெயரும் பிறவும் வினா அய்ப் புதுவோன் போலப் பொருந்துவ கிளந்து மதியுடம் படுத்தற்கு முரிய வென்ப்'

என்னுஞ் சூத்திரத்துட் கண்டு கொள்க.

65

- பாண்டிக்கோவை 57.

- வங்கர் கோவை.

இறையனார் அகப்பொருள் 6.

மதியுடன் படுத்தல் முற்றும்

தோழியாலாய கூட்டக் கிளவித் தொகை (82)

31. உடன்படு தோழி யயிர்த்தன்

றுரைத்தல் சுனையாட்டுதல்

அடர்ந்தெதிர் நன்சுனை யின்வியப்

பம்புலி யவ்வணங்கு

நடம்பயி லுஞ்சுனை தன்னை

மிகுத்தல் நடுங்கநாட்டம்

குடங்கையை வென்ற விழியாய்

குறையை யுறவுணர்வே.

1. போதரு மோவுங்கள்.