உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

67

அரியளாம் எனலும், (16) குலமுறை கிளத்தலும், (17) நகைத் துறையாடலும், (18) தழைமறுத்தலும், (19) குறிப்பறிந் தேற்றலும், (20) மடற்றிறங் கூறலும், (21) மடல்வெளிப் படுத்தலும், (22) மடல் விலக்கலும், (23) எழுதரிது என்றலும், (24) சேட் படைக்கு அழிதலும், (25) அருளுடையள் என்றலும், (26) தழைகோடலும், (27) குறிப்பறிவுறுத்தலும், (28) வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தலும், (29) மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தலும், (30) நாணொடு கூறலும், (31) முகம் புகுதலும், (32) நயந்தமை கூறலும், (33) பகற்குறியிடங் காட்டலும், (34) இடத்துய்த்தலும், (35) இடத்துய்த்து அகறலும், (36) எதிர்ப்படலும், (37) கோலஞ் செய்து உரைத்தலும், (38) உண்மகிழ்ந்து உரைத்தலும், (39) கொண்டு நீங்கலும், (40) வாய்விடு கிளவியும், (41) பொழுதுகண் டிரங்கலும், (42) படருறு கிளவியும், (43) வருந்துதல் கிளத்தலும், (44) இன்றறிந்தே னென்றலும், (45) குடித்திறங் கூறலும், (46) இற்செறி வுரைத்தலும், (47) சிறைப்புறக் கிளவியும் (48) வெளிப்பட உரைத்தலும், (49) கணியென உரைத்தலும், (50) நனைகெடச் செய்தில மென்றலும், (51) ஏறு விடுத்தலும், (52) சூளென நினைத்தலும், (53) புனங்கண் டழிதலும், (54) இரவிடங் காட்டலும் (55) வரவுணர்ந் துரைத்தலும், (56) தாய்துயி லறிதலும், (57) இரவுக்குறியுய்த்தலும், (58) குறியுய்த் தகறலும், (59) குறியெதிர்ப் படலும், (60) திங்கட்கு உரைத்தலும், (61) அன்னத்தொலியுணர்தலும், (62) கடலொலி கூறலும், (63) ரவுக்குறி கழிதலும், (64) கழிபடர் கிளவியும், (65) கையறு கிளவியும், (66) அச்சக் கிளவியும், (67) பகல்வரல் என்றலும், (68) இரவு வரல் என்றலும், (69) இரவும் பகலும் குறிவாரால் என்றலும், (70) தன்னுட் கையாறெய்திடு கிளவியும், (71) கடலொடு கவலலும், (72) ஆற்றாமை கூறலும், (73) வரைவு கிளத்தலும் (74) குறிப்புரைத்தலும், (75) இல்ல துரைத்தலும், (76) அலரறிவித்தலும், (77) அயன்மணம் உரைத்தலும், (78) மணமுர சறைதலும் (79) பரிசங் கிளத்தலும், (80) உடன்போக் குரைத்த லும், (81) செலவுடன் படுத்தலும், (82) செலவழுங்குவித்தலும், எனப்படும் என்றவாறு.

ஆ. பகற்குறி

1. அவற்றுள் அயிர்த்தல் என்பது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகள் கண்சிவப்பு வேறுபாடு கண்ட தோழி அயிர்த்துரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: