உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

மற்றின்றா துண்டோ மலர்வல்லி வாடியதின் றெற்றினா லாமா றிது”

(185) “கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட்பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது.

69

கிளவித் தெளிவு.

- திருக்குறள் 1272.

2. சுனையாட்டுரைத்தல் என்பது நெருநல் நின்னை நீங்கி மேதக்க தோர் சுனையாடினேற்கு ஆயிற்றாகாதே இவ்வேறு பாடு எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

6

(186) "மதிமர பாந்திரு மாமர பிற்றிகழ் மாறனெங்கோ

னதிசெய பாண்டிய னாமரி கேசரி யானைதங்கும்

பொதியிலி னாங்குனை நீங்கிய போதொரு பூஞ்சுனைவாய் விதியது தான்கொடு போய்ப்புன லாட்டு விளைவித்ததே”

பாண்டிக்கோவை 85.

3. சுனைவியந்துரைத்தல் என்பது சுனையாடினார்க்கு இந்நீர்மை பெறலாம் எனின் யானுங் குடைவேன் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(187) "செந்நிற மேனிவெண் ணீறணி

வோன்றில்லை யம்பலம்போல்

அந்நிற மேனிநின் கொங்கையி

லங்கழி குங்குமமு

மைந்நிற வார்குழல் மாலையுந்

தாதும் வளாய்மதஞ்சே ரிந்நிற மும்பெறின் யானுங் குடைவன் இருஞ்சுனையே’

(188) “தேர்மன்னு வாட்படை செந்நிலத் தோடச் செருவிளைத்த போர்மன்னு தென்னன் பொதியிற் புனமா மயில்புரையும்

- திருக்கோவையார் 69.

1 மன்னன்.