உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

11 இளங்குமரனார் தமிழ்வளம்

5. தகையணங்குறுத்தல் என்பது தலைவியை வரையணங் காகச் சொல்லுதல். அதற்குச் செய்யுள்:

(197) "மண்தான் நிறைந்த பெரும்புகழ்

மாறன்மந் தாரமென்னும்

தண்தா ரவன்கொல்லித் தாழ்சுனை

யாடிய தானகன்றாள்

ஒண்தா மரைபோல் முகத்தவள்

நின்னோ டுருவமொக்கும்

வண்டார் குழலவள் வந்தால்

66

இயங்கு வரையணங்கே’

(198) “அம்ம வாழி வெம்முலை யணங்கே நிலனோ விசும்போ நீரோ வரையோ அலமருந் தளிக்கோ லஞ்சிறைச் சேவல் உளிவாய்ப் புட்கொடி இனியன் தொண்டித் தண்கயத் தலர்ந்த செந்தா மரையோ யாவ தாகநின் னுறைபதி தானே மாயிருஞ் சிலம்பின் மடமகள் மாவின் தண்டளிர் புரையு மேனி வண்டுகொளச் சொரிமது விழிந்த பின்னருங் கூழை நின்னே போலும் இன்னிசைத் தேமொழி யென்னிணைக் குறுமகட் பிரிந்தவென்

இன்னல் நெஞ்சத் தொன்றுதெரி விலனே

பாண்டிக்கோவை 88.

- 1(?)

6. நடுங்கநாட்டம் என்பது தலைவியை நடுங்கச் செய்து உண்மை அறிதல். அதற்கச் செய்யுள் வருமாறு :

(199) "ஆவா இருவர் அறியா

அடிதில்லை அம்பலத்து

மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின்முன்னித்

தீவா யுழுவை கிழித்ததந்

தோசிறி தேபிழைப்பித்

1. நம்பியகப் பொருள். 139. மேற்கோள்.