உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம்

11

குடைமன்னன் கோடுயர் கொல்லியஞ் சாரற் குறவர்களே.

(234) “இவளே,

'கானல் நண்ணிய காமர் சிறுகுடி

நீர்நிறப் பெருங்கடல் கலங்க வுள்புக்கு மீனெறி பரதவர் மகளே; நீயே, நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வர் காதன் மகனே; நிணச்சுறா வறுத்த வுணங்கல் வேண்டி யினப்புள் ளோப்பு மெமக்குநல னெவனோ புலவு நாறுதுஞ் செலநின் றீமோ

பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ வன்றே

யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே”

(235) “நிலையிருங் குட்டத்தின் நெடுந்திமில் இயக்கி வலையில் தந்த வாடுமீன் உணங்கல்

விலையோ விலையென வேட்பக் கூறி நெல்லொடு பெயரும் நிரம்பா வாழ்க்கை வேட்டக் கிளையொடு வினவுதிர் எனினே பூட்டுவிற் புரையும் புருவவாண் முகத்துப் பிறைகிடந் தன்ன நுதலிவள்

பாண்டிக்கோவை 132.

இறைவளைப் பணைத்தோள் எய்தலோ அரிதே”

(236) “திருந்தா வாழ்க்கைச் சிறுகுடி எமக்குப் பெருந்தகை அண்ண னின்னிடைப் பொருந்திய கேண்மையும் புரைவதோ வன்றே”

(237) “சேரி வலைஞர் திறைகொணர்ந்த மீனுணங்கல் மூரி வலையுணங்கு முன்றில்வாய்-நீரெங்கள் தேங்கோதை தோள்சேரச் சேருமோ சேர்ப்பரே பூங்கோதை யோடும் புலால்”

1..

கான நண்ணிய.

- நற்றிணை 45.

- சிற்றெட்டகம்.

பொருளியல் 39.

- (?)