உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம் 12

இ. ள்) இவன்காண்: புள்ளிகளையுடைய வண்டுபோன்ற எழுந்து அசையும் பிடரையுடைய குதிரையின் மேலோன்; இவன் யாவன்?' என வினவினீர் ஆயின், தோல்வி கண்டறியாத வலிமையமைந்த உள்ளத்தனாய்ப், பகைவர் அஞ்சும் சுரை அமைந்த நெடியவேற்படையை ஒளிமிக்க அணிகலம் எனக் கொண்டோன்; அவனே காண்; எம் தலைவன்; இஃது அவன் குதிரையாம்; செற்றம் அமைந்த உள்ளம் பற்றுதலால் இவண் வந்தனன். வாணாள் குறைந்த வீரர்களே, நுங்களுள் எவரும் அவனைத் தலைப்படாது அகலுங்கள்; நேற்றைப் பகலில் முறைமுறையே வந்த கடிய வலிமை யமைந்த மனம் செருக்கி பெரிய யானைகள் பதைப்புண்ணுமாறு அழித்து, அக் களத் திலே இறந்த வீரன் தம்பின்; தொடுத்த கழலையும், அணிந்த நொச்சிமாலையையும் உடைய பீடுடையாளன் அச்சம் என்னும் ஒருபொருள் உண்டாதலை அறியான்; எவரும் உய்ந்து போகா வண்ணம் ஒழிப்பான் காண் என்றவாறு.

-

-

இ து: மறவீர், இவனே, மேலோன்; சுடர்ப்பூணோன்; அவனே எம்மிறை; கதுவ வந்தனன்; அச்சம் அறியான்; ஆரணங்கினன்; குறுகல் ஓம்புமின் என்பது.

( வி. ரை) முன்னைநாட் போரிலே தன் முன்னோனை இழந்தானாகிய தலைமை வீரனைக் கண்டு அவன் படைவீரன் ஒருவன் பகைப்படைவீரர் கேட்குமாறு உரைத்தது.

தம் தலைவனுக்குப் பகையாகிய வீரனுக்கு அணித்தே நின்று இஃதுரைத்தனர் ஆகலின் இவனே' என்றார். தம் தலைவனை போர்நோக்கி விரைந்து தொலைநின்று வரக் கண்டார். ஆகலின் பிற்பட ‘அவனே' என்றார். அவ்வாறு சொல்லளவில் வல்விரைந்து வரக்கண்டனர் ஆகலின் அவன் இவர்ந்த குதிரையை 'ஈதே' என்றார். இதனால் அவன்றன் கறுவும், கடுவிரைவும் குறித்தவாறு.

குதிரையின் விரைவுக்குக் காற்றையும் கணையையும் கூறுவர். இவர் வண்டினைக் கூறினார். பொறி வரி யாவது புள்ளிகளையுடைய வண்டு. இனிப் பொறி விளக்கமும் ஆம். (சிந். நாமகள். 15. நச்.) பொறிவரிக்கு ஒப்பிட்டார் எனினும் ஆம், வண்டு தேன் தேர்ந்து உண்ணுங்கால் எழுந்தும் படிந்தும் இமிரும் ஆகலின். “குருகு பறந்துன்ன வெள்ளை” என்பது ஒரு பழம் பாட்டு (புறத்திரட்டு. 1387).

'இவனே' என அப்படைத்தலைவன் வீரர் இடையே அவனைப்பற்றி விரித்துரைத்தல் தகுமோ எனின் தகும் என்க.