உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம்

12

அறியப்பெறும் அரசர் எண்மருள் பெருஞ்சேரல் இரும்பொறை நீங்கிய எவரும் 'அதியர்மேல் படையெடுத்தாரல்லர். இவ்வாறாகவும் பெருஞ்சேரல் ‘தகடூர் நூறியது ஏன்?

66

பெருஞ்சேரல்

இரும்பொறையை வெகுண்டெழச் செய்தவன் அவன் உடன்பிறந்தான்; இளையவன்; அவனை அழிக்கவே படைகொண்டு எழுந்தான். அதனைக் கண்ட சான்றோர் முந்தையோர் முறைகள் பலவற்றைக் கூறி அமைதிப்படுத்தினர்." இச் செய்தி தகடூர் யாத்திரை ஆறாம்

பாடலால் புலப்படுகின்றது.

66

'காலவெகுளிப் பொறையகேள்! நும்பியைச்

சாலும் துணையும் கழறிச் சிறியதோர்

கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா; அதுகண்டாய் நூல்கண்டார் கண்ட நெறி”

என்பது. இதில் 'பொறையினை நோக்கி ‘நும்பி’ என்று உரிமை யுரைத்த தறிக. பொறையன், தகடூர் எறிந்த பெருஞ்சோல் இரும்பொறை என்பவனே யாவன்.

பதிற்றுப்பத்துள், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய காக்கைபாடினியார் நச்செள்ளையார் ஒருவரே அவனைப் பெயர் கூறி விளித்தாரல்லர். எஞ்சியோரெல்லாம் வேந்தன் பயரை விளித்துரைத்துளர். அரிசில் கிழார் பெருஞ்சேரல் இரும் பொறையைப், ‘பொறைய' என மூன்று பாடல்களில் (73, 75, 77) விளித்துள்ளார். அவர் தகடூர் யாத்திரை இயற்றிய புலவர்களுள் ஒருவர். ஆகலான், அம் மரபுப்படி அவரே இப் பாடலைப் பாடினார் எனலும் தகும். அதற்கு மேலே கூறப்பெறும் குறிப்புகளும் துணையாம்.

பொறையனிடம் "நும்பிமேல் சேறல் வேண்டா" என்று அரிசிலார் கூறியதை அவன் ஏற்று அமைந்தான். பின்னே ‘நும்பி” என்று உரைத்தாரே அவனிடத்துச் சென்றார். அவன் தன் உடன்பிறந்தானை எதிர்ப்பதற்காகக் களிற்றுப் படையைத் திரட்டிப் பொலிவோடும் தோன்றினான். அவனைக் கண்டு,

5.

“ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய

வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே!

99

32-10. நெடுமிடல் சாய' என்பதில் நெடுமிடல் அஞ்சியின் இயற்பெயர் என்பார் அரும்பத உரையாசிரியர். ஆராயத் தக்கது.