உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

வினவுதி யாயிற் கேண்மதி சினவா (து) ஒருகுடர்ப் படுதர ஓரிரை துற்றும் இருதலைப் புள்ளின் ஒருயிர் போல அழிதரு வெகுளி தாங்காய். வழிகெடக் கண்ணுறு பொழுதிற் கைபோல் எய்தி

நும்மோர்க்கு, நீதுணை யாகலு முளையே; நோதக

முன்னவை வரூஉம் காலை நும்முன் நுமக்குத்துணை யாகலும் உரியன்; அதனால் தொடங்க உரிய வினைபெரி தாயினும் அடங்கல் வேண்டுமதி அத்தை; அடங்கான் துணையிலன் தமியன் மன்னும் புணையிலன் பேர்யா றெதிர்நீந்தும் ஒருவன் அதனைத் தாழ்தல் அன்றோ அரிது; தலைப்படுதல் வேண்டிற் பொருந்திய

வினையின் அடங்கல் வேண்டும்

அனையை யாகீண் டறிந்திசி னோர்க்கே”

66

17

தகடூர். 7 எனப் பொருண்மொழி புகன்றார். "ஒளிவிடு.... வேந்தே" என இனிதுற விளித்தார்; "கேண்மதி” எனத் தம்பால் ஈர்த்தார்; ஒருகுடர்...... போல்” உடன்பிறப்பை நயமாக மொழிந்தார்; 'நும்மோர்க்கு நீதுணையாகலும் உளை; நும்முன் நுமக்குத் துணையாகலும் உரியன்” என உடன்பிறந்தார் உரிமைக் கடப் பாட்டை ஓதினார். அடங்கான்....... அரிது" என அவன் அடங்காதவனாகவும், துணையில்லாதவனாகவும், தனித்தோ னாகவும், தக்க பாதுகாப்பற்றவனாகவும் இருப்பதைச் சிறிதும் மறையாமல் எடுத்துரைத்து வெற்றி பெறலருமையைக் கூறினார். "தொடங்க வுரிய வினைபெரிதாயினும் அடங்கல் வேண்டும்; “வினையின் அடங்கல் அ வேண்டும்" என அழிபாட்டுக்குக் கழி விரக்கம் கொண்டவராய்ப் பன்னியுரைத்துப் பரிவுடன் வேண்டினார். இந்நன் மொழியையும் ஏற்றுக்கொண்டானல்லன் பொறையனின் இளையன். புலவர் புண்பட்டார். இரும்பொறை வேந்தனை வேண்டிய பான்மையையும், அவன் பொறை கொண்டமாண்பையும் உன்னினார்.தக்க பல சான்றோர்களையும் தம் துணையாகக் கொண்டு முயன்றார். எவ்வாறேனும் குடியழிவைக் கெடுத்தல் வேண்டும் என்பதே குறியாகப் பணி செய்தார். அவர்தம் முயற்சியில் தோல்வியே கண்டார். பின்னர்ப் பொறையனைக் கண்டு தம் ஆற்றாமை மீதூர,

66