உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

66

இளங்குமரனார் தமிழ்வளம்

'யான்சென் றுரைப்பவும் தேறார்; பிறரும்

சான்றோர் உரைப்பவும் தெளிகுவர் கொல்லென ஆங்குமதி மருளக் காண்குவல்

""

யாங்குரைப் பேனென வருந்துவல் யானே

12

பதிற். 73

என்றார். இதனால் தகடூர்ப் போர் தாயத்தாரிடையே தோன்றியது என்பதை உணரலாம். “பாரத வரலாறு போன்றே இந் நூலும் தாயத்தாரிடை நிகழ்ந்த போரைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்' என்று ஆராய்ச்சியாளர் கூறுவது பொருந்துவதேயாம்.

தாயத்தார் போர் தகடூர் அதியமானுக்குத் தாவியதைக் குறிப்பால் அறியவே முடிகின்றது.பொறையன் தம்பி, அண்ணனொடு மாறுபட்டு அதியமான் துணையையும் மற்றை வேந்தர் துணையையும் நாடியிருத்தல் வேண்டும். அதியமான் அடைக்கலம் தந்து தாங்கியிருத்தல் வேண்டும். இந் நிலையில் தாயப் போராக இருந்தது, தகடூர் அதியமான் போராக மாறித் தகடூர் அழிவுக்கு வழி செய்திருத்தல் வேண்டும். வரலாற்றுக்கண்கொண்டு நோக்கின் இவ்வாறு நிகழ்வது கூடாதது அன்று. உரிமை வேட்கையாலும் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்து உதவியமையாலும் மருதுபாண்டியர்க்கு அரணாக இருந்த காளையார் கோயில் காடும் அழிந்து அவரும் அழிந்துபட்டனர் அல்லரோ! அத்தகைத்தே தகடூர் அதியமான் அழிவு என்க.

இனி,‘அதியமான் அடைமதில் பட்டிருந்தமைஇழுக்கன்றோ?’ என்பார் உளராயின் அதுவும் தவறாம், தகடூர்க்குப் பொறையன் படை வந்து ஊன்றுமளவும் அரண்வலுவால் உள்ளிருந்தனரே அல்லாமல் பொருதற்கு அஞ்சி அமைந்தார் அல்லர். இது குறித்தே, ஒருவன் மேற்சென்றுழி எதிர் செல்லாது தன் மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின் அஃதுழிஞையுள் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் ருந்ததாம்” என்றார் நச்சினார்க்கினியர். பதிற்றுப் பத்தின் பழைய உரையாசிரியரும் “எதிர் ஊன்றுவார் இன்மை தோன்றக் கூறிய அதனால் வஞ்சித்துறைப் பாடாணாயிற்று” (80) என்றார்.

தகடூர்ப் போரில் அதியமானுடன் சோழ பாண்டியர் ஆகிய இருபெரு வேந்தரும் கலந்து கொண்டனர் என்பதைப் பதிற்றுப் பத்துப் பதிகத்தால் அறியலாம். தகடூர் யாத்திரையும் 'இகழ்தல் ஓம்புமின் புகழ்சால் மன்னிர்” என (33) மன்னர்

1. புறத்திரட்டு - முகவுரை திரு. வையாபுரிப்பிள்ளை; கலைக் களஞ்சியம்.