உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

66

19

""

பலராதலைத் தெரிவிக்கும். அவர்களை ஒருங்கு சேர்த்தற்கு உரிய முயற்சித் தாழ்வாலோ, தன் முழுமுதல் அரணத்தில் வலி மிகுதியாலோ அதியமான் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் வருமளவும் அமைந்தான் என்க. இதனைப் ‘புறத்தோன் அகத் தோன் மேல் வந்துழி அவன் பகையினைப் போற்றாது அகத் தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மதிலரண் கூறுதல் என்பதற்கு (தொல். புறத். 12.) “மொய்வேற் கையர்” என்னும் தகடூர் யாத்திரைப் பாடலை மேற்கோள் காட்டி, ல இஃது அகத்தோன் செல்வம் போற்றுதற்கு ஏதுவாகிய முழுவரண் கூறுதலிற் செல்வத்துள் அடங்காதாயிற்று. இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது” என்று நச்சினார்க்கினியர் கூறுவதை நோக்க, அதியமான் மதிலினுள் இருந்தது ஆண்மைக்கு ழுக்காவதன்றாம். அதியமானால் சிறப்பெய்திய 'பெரும்பாக்கன் வீரமாண்பு, 2துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கோளாதன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை முதலாயவற்றைப் கற்போர் தகடூர் அதியமான்களின் வீரமாண்பை வியவாதிரார். முடி வேந்தனாகிய சேரனின் படையாண்மையே அதியமானுக்கு முடிவையும் தகடூர்க்கு அழிவையும் தந்தது என்பதை,

"நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்கும்

டிதாக்கருந் தானை இரும்பொறை”

என்பதால் அறியலாம் (தகடூர். 45)

தகடூர்ப் போர் பலநாள்கள் நடந்தது என்பதைச் சில தொடர்கள் விளக்குகின்றன. அவை.

"மேனாள், கொல்படை மொய்த்த குன்றுயர் விழுப்புண்

66

விடலை காப்பமைந் தனனே”

இளையோன், இன்றுந்தன்,

குதிரை தோன்ற வந்துநின் றனனே"

"தொல்லை ஞான்றைச் செருவினுள்”

என்பவையாம்.

(26)

(30)

(33)

தகடூர்ப்போர்க்களத்தில் அரிசில் கிழாரும் பொன்முடியாரும் ருந்து வீரப்பண் பாடினர் என்பதை நச்சினார்க்கினியர் உரையால் அறிவதுடன்,

1. தகடூர். 44.

2. தகடூர். 41.