உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம் 12

"மெய்ம்மலி மனத்தின் நம்மெதிர் நின்றோன்” எனச் சேரமானுடன் தம்மை அரிசில்கிழார் ‘நம்’ என உளப்படுத்திக் கூறியதாலும் அறியலாம்.

தகடூர் யாத்திரையில் ‘தர்க்கவாதம் உண்டு' என்பதைத் தக்கயாகப் பரணி உரை (131) கூறுகின்றது. அதற்கு ஓர் எடுத்துக் காட்டாக “பரவை வேல்தானை என்னும் 23 ஆம் பாடல் விளங்குகின்றது. அதியமான் தாய்க்குத் தோற்றிய தீக்குறிகளை ஒரு பாடல் காட்டுகின்றது (47).

பாட்டும் உரையும்

தகடூர் யாத்திரை பாட்டும் உரையும் விரவியமைந்த நூல் எனப் பேராசிரியர் கூறுவதை மேலே அறிந்தோம். அவரே தகடூர் யாத்திரையில் பாட்டு வருவது சிறுபான்மை என்னும் குறிப்பையும் வழங்குகின்றார்.

"பாட்டிடை வைத்த குறிப்பினானும்” என்னும் செய்யுளியல் (173) நூற்பாவுக்கு உரை விரிக்கும் பேராசிரியர் “பாட்டிடை வைத்த குறிப்பினானும் என்பது ஒருபாட்டினை இடை இடை கொண்டு நிற்கும் குறிப்பினான் வருவன உரையெனப்படும். என்னை? பாட்டுவருவது சிறுபான்மையாகலின், அவை, யாத்திரை போல்வன" என்றார்.

தகடூர்

“எத்துணை அரிய பாடல்களை இழந்தோமோ?" என நாம் ஏங்கும் ஏக்கத்தைப் 'பாட்டு வருவது சிறுபான்மை' என்னும் பேராசிரியர் உரை ஓரளவு தணிக்க உதவுகின்றது. ஆனால், "பெரும்பான்மை உரையுள் எத்துணை அரிய வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிக் கிடந்தனவோ?" என்னும் ஏக்கம் மிகைத் தெழுவதைத் தடுக்கச் செயலற்று ஒழிகின்றது.

தகடூர் யாத்திரைப் பாடல்களாக நாம் இந் நாள் அடைந்திருக்கும் பாடல்கள் நாற்பத்தெட்டேயாம். இவற்றுள் 44 பாடல்களை வழங்கிய வண்மை புறத்திரட்டு என்னும் தொகை நூலுக்கே உண்டு; புறத்திரட்டில் காணப்பெறாத மூன்று பாடல்களையும், அரிய பல குறிப்புகளையும் உதவிய பெருமை நச்சினார்க்கினியர்க்கு உண்டு; தக்கயாகப் பரணி உரையாசிரியரும் ஒரு பாடலை வழங்கிய புகழாளராக விளங்குகின்றார்.

'தகடூர் யாத்திரை'யைக் காணுதற்குத் 'தமிழ் யாத்திரை மேற்கொண்ட பெரும்பேராசிரியர் உ.வே.சாமிநாதையர்