உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம்

12

அடிப்படை முதல் தகடூர் நூறி நாடுவந்து சேர்ந்த அளவும் நிகழ்ந்த செய்திகள் தொடர்நிலையாக அமைந்திருக்கும். இதில் போர்நிகழ்ச்சிகளே மிக்கிருந்திருக்கும் என்பது வெளிப்படை. இதனை ஒருவாற்றான் நச்சினார்க்கினியர் உரையாலும், புறத் திரட்டாலும் அறிந்து கொள்ள முடிகிறது.

யானைநிலை, குதிரை நிலைகளை விரித்துரைக்கும் நச்சினார்க்கினியர் “இனி யானைநிலைக்கும் குதிரைநிலைக்கும் துறைப் பகுதியாய் வருவனவும் கொள்க. அஃது அரசர் மேலும் படைத் தலைவர் மேலும் ஏனையோர் மேலும் யானைசேறலும், களிற்றின்மேலும் தேரின்மேலும், குதிரைசேறலும், தன்மேலிருந்து பட்டோர் உடலை மோந்து நிற்றலும் பிறவும்” என்றும், “இவை தனித்து வாராது தொடர்நிலைச் செய்யுட்கண் வரும். அவை தகடூர் யாத்திரையினும் பாரதத்தினும் காண்க. புறநானூற்றுள் தனித்து வருவனவும் கொள்க” என்றும் எழுதி யுள்ளமையால் (தொல். புறத். 72.) தெளிவாம்.

தொடர்நிலைச் செய்யுள் பெரும்பாலும் ஒருவரால் யாக்கப் பெறுவது. 'அருகியே இதற்கு விதிவிலக்குண்டு. இத் தகடூர் யத்திரைச் செய்யுள்கள் நேருக்கு நேர் நின்று பாடியன வாகவே பெரும்பாலும் விளங்குகின்றன. "புறநானூற்றுப் L பாடல்களைப் போலத் தனித்தனியே பாடி, அவற்றைத் தொகுத்து அடைவு செய்திருத்தல் வேண்டும். அதில் பலர் பாடல்களை நிகழ்ச்சி ஒழுங்கு முறையில் வைக்கப் பெற்றதாக அதற்குப் பிற்காலத்தில் ஒருவர் இடைஇடையே உரைநடையில் தொடர்புபடுத்தி வரலாற்று விளக்கம் செய்திருக்க வேண்டும்" என்பதைக் கருத முடிகின்றது.

இப்பொழுது நாம் அறிந்து கொள்ளும் அளவில், தகடூர் யாத்திரையில் 2அரிசில்கிழார் பாடலும், பொன்முடியார் ர் பாடலும் உண்டு என்பது தெளிவு. பிறர் பாடியவும் உளவோ இலவோ என்பதை உறுதி செய்தற்கு இல்லை.

அரிசில்கிழாரும், பொன்முடியாரும் தனித்தனியே பாடுவதை அன்றி உடனிருந்து சேர்ந்து பாடிய செய்தி ஒன்றையும்

1. சீகாளத்திப் புராணத்தில் பத்துச் சருக்கங்கள் உள. அவற்றுள் நக்கீரச் சருக்கமும் கண்ணப்பச் சருக்கமும் சிவப்பிரகாசர் பாடினார். கன்னியர் சருக்கமும் சிலந்தி முதல் முற்கதைச் சருக்கமும் அவர் தம்பியார் கருணைப் பிரகாசர் பாடினார். மற்றைச் சருக்கங்களை அவர் தம்பியார் ஞானப் பிரகாசர் பாடினார். இவ்வாறே உரையமைந்த நூல்களும் அரிதிலுண்டு.

2. தொல். புறத். 8, 12 நச்சினார்க்கினியர் உரை.